Home /News /international /

பெண்ணை ஏமாற்றி ஆணுறை பயன்படுத்தாமல் உடல் உறவு.. பாலியல் குற்றமாக அறிவித்த நீதிமன்றம்

பெண்ணை ஏமாற்றி ஆணுறை பயன்படுத்தாமல் உடல் உறவு.. பாலியல் குற்றமாக அறிவித்த நீதிமன்றம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சம்பந்தப்பட்ட ஆணும் பெண்ணும் 2017ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் பழகத்தொடங்கியுள்ளனர்.

    உடல் உறவின்போது பார்ட்டனரின் விருப்பத்திற்கு மாறாக காண்டம் பயன்படுத்தாவிட்டால் அது கிரிமினல் குற்றம் என கனடா உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் தொடர்பான வழக்கில் இந்த தீர்பானது வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட ஆணும் பெண்ணும் 2017ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் பழகத்தொடங்கியுள்ளனர்.

    பின்னர் இருவருக்கும் இடையே உறவு மலர்ந்த நிலையில், இருவரும் உடல் உறவில் ஈடுபடலாமா என ஆண் கேட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பெண் ஆணுறை அணிந்து கொண்டால் அதற்கு சம்மதம் எனத் தெரிவித்துள்ளார். முதலில் அந்த ஆண் பெண்ணிடம் சரி என்று கூறி ஆணுறை அணிந்து உடல் உறவில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அன்றே இரண்டாம் முறை உடல் உறவில் ஈடுபட்டபோது அந்த ஆண் பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக ஆணுறை அணியாமல் உறவு கொண்டுள்ளார். சிறிது நேரத்திற்குப் பின் இதை உணர்ந்து கொண்ட அந்த பெண் அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்நாட்டின் விசாரணை நீதிமன்றம் பெண்ணின் புகாரை தள்ளுபடி செய்தது. குற்றஞ்சாட்டப்பட்ட ஆணின் தரப்பு, அந்த பெண்ணின் விருப்பம் மற்றும் சம்மதத்துடன் தான் உடல் உறவில் ஈடுபட்டேன் என முன்வைத்த வாதத்தை ஏற்று விசாரணை நீதிமன்றம் பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில், இதற்கு எதிராக அந்த பெண் கனடா நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்து நீதிமன்றம் உடல் உறவின் போது பார்ட்னரின் விருப்பத்தை மீறி நாம் செயல்படுவது முறையல்ல. அந்த பெண் ஏற்கனவே இது குறித்து ஆணிடம் தெளிவாக தனது விருப்பத்தை கூறிய பின்னரும், அவர் அதை மீறி செயல்பட்டது குற்றமாகும். பார்ட்னரின் விருப்பத்திற்கு மாறாக ஆணுறை  பயன்படுத்தாமல் இருந்தது பாலியல் குற்றமாகவே கொள்ளப்படும் எனத் தீர்ப்பளித்துள்ளது.

    இதையும் படிங்க: நிர்வாணப் புகைப்படங்கள் இணையத்தில் பரப்பிய ஹேக்கர்.. துணிவுடன் எதிர்கொண்டு தண்டனை வாங்கித் தந்த பெண்!

    சமீப காலமாக உடல் உறவின் போது ஆணுறை பயன்பாடு குறித்த சர்ச்சை எழுவது வாடிக்கையாகியுள்ளது. பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக ஆண் ஆணுறை பயன்படுத்துவதில்லை என்ற புகார் அதிகம் காணப்பட்டாலும், ஜெர்மனியில் பெண் ஒருவர் ஆணுக்கு தெரியாமல் அவரது ஆணுறையில் ஓட்டை போட்டு கர்ப்பமான சம்பவமும் நடைபெற்று பரபரப்பை கிளப்பியது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Canada, Condom, Sex

    அடுத்த செய்தி