முகப்பு /செய்தி /உலகம் / துருக்கி நிலநடுக்கத்தில் மடிந்த பிஞ்சு குழந்தைகள்... சிவப்பு பலூன்கள் மூலம் அஞ்சலி

துருக்கி நிலநடுக்கத்தில் மடிந்த பிஞ்சு குழந்தைகள்... சிவப்பு பலூன்கள் மூலம் அஞ்சலி

நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பலூன் வைத்து அஞ்சலி

நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பலூன் வைத்து அஞ்சலி

துருக்கி நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த குழந்தைகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் சிவப்பு நிற பலூன்களை கட்டி தன்னார்வலர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaIstanbul Istanbul

துருக்கி மற்றும் சிரியா நாடுகளுக்கு இடையே மையமாக கொண்டு பிப்ரவரி 6ஆம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இரு நாடுகளையும் நிலைகுலைய வைத்துள்ளது. இந்த கொடூர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46,000ஐ தாண்டியுள்ளது.

பேரிடரில் சிக்கித் தவிக்கும் துருக்கிக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மீட்பு குழுக்களை அனுப்பி உதவிகளை செய்தன. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வலர்கள் பலர் உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் ஹாடே நகரில் தன்னார்வலர் குழு ஒன்று பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக பிரத்தியேக உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.

நிலநடுக்க அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டு மீள முடியாத பல சிறுவர், சிறுமியருக்கு மனநல ஆலோசனைகளை வழங்கி தொடர்ச்சியாக நம்பிக்கை ஊட்டி வருகின்றனர். நிலநடுக்கத்தில் வீடு இழந்து முகாமில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு அவர்களின் பிறந்தநாள்களில் கேக் வெட்டி உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

மேலும், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த குழந்தைகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் சிவப்பு நிற பலூன்களை கட்டிட இடிபாடுகளில் தென்படும் கம்பிகள் மீது கட்டி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

First published:

Tags: Turkey Earthquake