Home /News /international /

கனடா, அமெரிக்காவை புரட்டிப்போட்ட வரலாறு காணாத வெப்ப அலை - காரணம் இது தான்!

கனடா, அமெரிக்காவை புரட்டிப்போட்ட வரலாறு காணாத வெப்ப அலை - காரணம் இது தான்!

heat wave

heat wave

அமெரிக்கா மற்றும் கனடாவில் இப்படி ஒரு வரலாறு காணாத வெப்ப அலை ஏற்படுவதற்கு மனிதனால் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றம் தவிர வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது.

கொரோனா தொற்றுக்கிடையே மேற்கு அமெரிக்கா மற்றும் கனடாவில் கடந்த மாத இறுதியில் இதுவரை இல்லாத அளவு வரலாறு காணாத வெப்ப அலை தாக்கியது. வெப்பநிலை அதிகரிப்பை தொடர்ந்து அந்நாடுகளில் வீசிய அனல் காற்று காரணமாக ஏராளமானோர் பாதிப்பு அடைந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் வரலாறு காணாத அனல் காற்றில் சிக்கி பலியாகினர். கனடா மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட இந்த வரலாறு காணாத வெப்பநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. சுட்டெரித்த வெயிளுடன் அனல் காற்றும் சேர்ந்து மக்களை வாட்டி வதைத்தது. ஒருகட்டத்தில் கடும் வெப்பநிலை காரணமாக சாலைகள் உருகும் நிலை ஏற்பட்டது அந்நாட்டு மக்களை மட்டுமின்றி உலக நாடுகளையும் அதிர்ச்சியடைய வைத்தது.

இந்நிலையில் ஜூன் இறுதியில் மேற்கு அமெரிக்கா மற்றும் கனடாவில் இப்படி ஒரு வரலாறு காணாத வெப்ப அலை ஏற்படுவதற்கு மனிதனால் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றம் தவிர வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது. இதை தவிர வேறு காரணங்களால் இப்படிப்பட்ட அசாதாரண வெப்ப சூழல் கிட்டத்தட்ட சாத்தியமில்லை என்று தங்களது தீவிர ஆராய்ச்சிக்கு பின் முன்னணி காலநிலை விஞ்ஞானிகளின் குழு (leading climate scientists) குறிப்பிட்டுள்ளது.

Also Read:   தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

கடந்த மாத இறுதியில் பசிபிக் வடமேற்கில் ஏற்பட்ட அசாதாரண வெப்ப அலை புவி வெப்பமடைதல் இல்லாமல் நிகழ்ந்திருக்காது என்று ஆய்வில் ஈடுபட்ட சர்வதேச காலநிலை ஆய்வாளர்கள் குழு தெரிவித்துள்ளது. ஒரேகானில் இருக்கும் போர்ட்லேண்ட் நகரில் 116 டிகிரி பாரன்ஹீட் , பிரிட்டிஷ் கொலம்பியாவின் கனேடிய மாகாணத்தில் 121 டிகிரி பாரன்ஹீட் என வெப்பநிலை மிகவும் தீவிரமாக இருந்தது. இந்த அசாதாரண வெப்பநிலை குறித்து மதிப்பிட ஆராய்ச்சியாளர்கள், எந்தவொரு வருடத்திலும் இது போன்ற தீவிர வெப்ப அலை ஏற்பட 0.1 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக அவர்கள் மதிப்பிட்டனர்.

இதனிடையே உலக வானிலை பண்புக்கூறு எனப்படும் ஒரு கூட்டு குழுவின் ஒரு பகுதியாக 26 பிற விஞ்ஞானிகளுடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்ட ராயல் நெதர்லாந்து வானிலை ஆய்வு நிறுவனத்தின் கீர்ட் ஜான் வான் ஓல்டன் போர்க் பேசுகையில், "இது ஒரு அரிய நிகழ்வு என்றாலும், காலநிலை மாற்றம் இல்லாமல் இவ்வாறு நடக்க சாத்தியம் இல்லை" என்று குறிப்பிட்டார். தங்களது ஆராய்ச்சி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆய்வாளர் ஃபிரைடெரிக் ஓட்டோ, " இந்த வரலாறு காணாத வெப்பம் மற்றும் அனல் காற்றுக்கு காலநிலை மாற்றம் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது என்பதில் சந்தேகம் இல்லை" என்று குறிப்பிட்டார்.

Also Read:    தோனிக்கு 40 வயசு.. 2021 ஐபிஎல் தான் அவரின் கடைசி போட்டியா?

காலநிலை மாற்றம் ஒரு பங்கைக் கொண்டிருந்ததா என்பதை கண்டறிய, ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் 1800-களின் பிற்பகுதியிலிருந்து சுமார் 1.2 டிகிரி செல்சியஸ் புவி வெப்பமடைதலுக்குப் பிறகு, காலநிலையை ஒப்பிட்டுப் பார்க்க வரலாற்று தரவுகள் மற்றும் கம்ப்யூட்டர் சிமுலேஷன்களை இன்றைய காலநிலையுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது அப்ஸர்வேஷன்கள் மிகவும் தீவிரமாக இருப்பதை கண்டறிந்தனர், மேலும் அவை வரலாற்று ரீதியாகக் கவனிக்கப்பட்ட வெப்பநிலைகளுக்கு அப்பாற்பட்டவை என்பதும் தெரிய வந்தது. ஆனால் இன்றைய காலநிலையுடன் ஒப்பிட்டு பார்த்த போது இந்நிகழ்வு ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டது.

Also Read:   ரஜினி போல ஸ்டைல் செய்து கெத்து காட்ட நினைத்து மேடையில் பல்பு வாங்கிய நபர் - வைரல் வீடியோ!

காலநிலை மாற்றம் வரலாறு காணாத அதிர்ச்சியூட்டும் வெப்பத்தை எவ்வாறு அதிகரித்தது என்பதற்கு இரண்டு பரந்த விளக்கங்களை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்தனர். முதலாவதாக, காலநிலை மாற்றம் இந்த நிகழ்வு நடக்க அதிக வாய்ப்புள்ளதாக மாற்றியிருக்கலாம். இதன்படி காலநிலை மாற்றத்தின் விளைவு இதற்கு காரணம் இல்லாமல் இருந்திருந்தால் உச்ச வெப்பநிலை சுமார் 2 டிகிரி செல்ஸியஸ் (3.6 டிகிரி பாரன்ஹீட்) குறைவாக இருந்திருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டாவது: ஒட்டுமொத்த புவி வெப்பமடைதலின் ஒரு சிறிய அளவு இப்போது இதுவரை காணப்பட்டதை விட தீவிர வெப்பநிலையில் வேகமாக அதிகரித்து வருவதால் கிளைமேட் சிஸ்டம் வரம்பை கடந்திருக்கலாம். மேலும் கூறியுள்ள ஆராய்ச்சியாளர்கள், இத்தகைய வெப்பநிலை வடக்கு ஐரோப்பா, அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற பிற உயர் அட்சரேகை இடங்களிலும் ஏற்பட சாத்தியம் இருப்பதாக கருதுவதாக குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினும் எதிர்காலத்தில் இதே போன்ற தீவிர வெப்ப அலைகள் இருக்குமா என்பதை தீர்மானிக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
Published by:Arun
First published:

Tags: Canada, Climate change, Heat Wave

அடுத்த செய்தி