ஆஸ்திரேலியாவை மூழ்கடித்த வரலாறு காணாத வெள்ளம்- பல்லாயிரக்கணக்கானோர் வீடிழந்தனர்!

அதிக வெப்பத்தால் மக்கள் உயிரிழக்கும் அபாயமும் ஆஸ்திரேலியாவின் தென்கோடியில் நீடித்து வருகிறது.

Web Desk | news18
Updated: February 4, 2019, 6:13 PM IST
ஆஸ்திரேலியாவை மூழ்கடித்த வரலாறு காணாத வெள்ளம்- பல்லாயிரக்கணக்கானோர் வீடிழந்தனர்!
டவுன்ஸ்வைல் நகரம், ஆஸ்திரேலியா (image- CNN)
Web Desk | news18
Updated: February 4, 2019, 6:13 PM IST
ஆஸ்திரேலியாவின் டவுன்ஸ்வைல் நகரம் கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

ஆஸ்திரேலியாவின் க்வீன்ஸ்லேண்ட் மாகாணத்தில் உள்ள டவுன்ஸ்வைல் நகரத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டவுன்ஸ்வைல் நகரத்தில் 3 அடி அளவுக்கு மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

சராசரியாக டவுன்ஸ்வைல் நகரில் பதிவாகும் மழை அளவைவிட 20 மடங்கு இம்முறை மழைப்பொழிவு அதிகரித்துள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 1998-ம் ஆண்டுக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவில் பெய்த அதிகப்படியான மழை இதுதான். சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியதால் நிலைமை சிக்கலில் உள்ளது. ராணுவ மீட்புப்படை வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

வடகிழக்கு ஆஸ்திரேலியா இவ்வாறு மழை வெள்ளத்தில் சிக்கித்தவிக்க, தெற்கு ஆஸ்திரேலியா கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பத்தால் மக்கள் உயிரிழக்கும் அபாயமும் ஆஸ்திரேலியாவின் தென்கோடியில் நீடித்து வருகிறது.

மேலும் பார்க்க: கேன் நீர் நன்மையா? தீமையா?
First published: February 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...