Home /News /international /

உடைகளை விற்றாவது மக்களுக்கு குறைந்த விலையில் கோதுமை தருவேன் - பாகிஸ்தான் பிரதமர் அதிரடி

உடைகளை விற்றாவது மக்களுக்கு குறைந்த விலையில் கோதுமை தருவேன் - பாகிஸ்தான் பிரதமர் அதிரடி

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்

உலகின் முன்னணி கோதுமை உற்பத்தியாளராக இந்தியா உள்ள நிலையில், இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி கோதுமை வர்த்தகம் செய்ய பாகிஸ்தான் முயன்று வருகிறது.

    பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தனது உடைகளை விற்றாவது நாட்டு மக்களுக்கு குறைந்த விலை கோதுமை தருவேன் என பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். அந்நாட்டின் கைபர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்களிடையே உரையாற்றிய பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் இதை கூறியுள்ளார். அந்நாட்டின் விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காமல் ஏறிவரும் நிலையில், உணவு பொருள்கள் விலை உயர்வால் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

    இந்நிலையில், மக்கள் மத்தியில் விலைவாசி உயர்வு குறித்து பிரதமர் ஷெபாஸ் பேசினார். கைபர் மாகாணத்தின் முதலமைச்சரான மஹ்மூத் கான் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கோதுமை விலையை குறைக்க வேண்டும். 10 கிலோ கோதுமை மாவை ரூ.400க்கு விற்க வேண்டும். இல்லை என்றால் எனது உடைகளை விற்றாவது மக்களுக்கு குறைந்த விலையில் கோதுமை கிடைக்க ஏற்பாடு செய்வேன்.

    இதை நான் அழுத்தமாகக் கூறிக்கொள்கிறேன். இதற்கு முன்னர் ஆட்சி செய்த பிரதமர் இம்ரான் கான் நாட்டிற்கு விலைவாசி உயர்வையும் வேலையின்மை ஆகிவற்றைதான் பரிசாக தந்துவிட்டு சென்றுள்ளார். ஒரு கோடி வேலைகள், 50 லட்சம் வீடுகள் என போலி வாக்குறுகிகளை அளித்த இம்ரான் கான், மாறாக மோசமான நிலையில் தான் நாட்டை விட்டு வைத்துள்ளார். ஆனால் நான் எனது வாழ்நாளை முழுவதுமாக அர்ப்பணித்து நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்றார். பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்து முன்னாள் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரிப் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்து ஒன்று திரண்டு கூட்டணி வைத்து இந்த ஆட்சியை நடத்தி வருகின்றன.

    இதையும் படிங்க: உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் ஞாபக மறதி - பதறிய கணவர்

    பாகிஸ்தானில் கோதுமை தான் அடிப்படை உணவுப் பொருளாக திகழ்ந்து வரும் நிலையில், அதன் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது. உலகின் முன்னணி கோதுமை உற்பத்தியாளராக இந்தியா உள்ள நிலையில், இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி கோதுமை வர்த்தகம் செய்ய பாகிஸ்தான் தற்போது முயன்று வருகிறது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Imran khan

    அடுத்த செய்தி