காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய விரும்புகிறேன் - அமெரிக்க அதிபர் டிரம்ப்

காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய விரும்புகிறேன் - அமெரிக்க அதிபர் டிரம்ப்
ட்ரம்ப்
  • News18
  • Last Updated: September 24, 2019, 7:57 AM IST
  • Share this:
இந்தியாவின் எதிர்ப்பை மீறி காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாக பாகிஸ்தானிடம் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் உச்சி மாநாட்டிற்காக இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் நியூயாரக்கில் திரண்டுள்ளனர். முதல் நாளில் இந்திய பிரதமர் மோடியுடன் கைகோர்த்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை தனியாக சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்தும் காஷ்மீர் பிரச்னை குறித்தும் இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்.

அப்போது இந்திய பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் தனது நண்பர்கள் என்றும் காஷ்மீர் பிரச்னையில் அமெரிக்காவின் உதவி தேவைப்பட்டால் இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரச பேச்சு நடத்த தாம் மத்தியஸ்தராக இருக்க விரும்புவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பிரச்னை சிக்கலானது என்பதால் இதை நீண்ட நாட்களுக்கு கொண்டு செல்ல முடியாது என்றும் இருநாடுகளும் விரும்பும் பட்சத்தில் தான் உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார். காஷ்மீர் பிரச்னையில் மூன்றாம் நபர் தலையீடு வேண்டாம் என இந்தியா தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், மத்தியஸ்தம் செய்ய உள்ளதாக பாகிஸ்தானிடம் மறைமுகமாக அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.


Also watch

First published: September 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்