அமெரிக்காவைத் தாக்கும் அமீபா - மூக்கின் வழியாக உடலில் நுழைந்து மூளையை பாதிக்குமாம்...

அமீபா தாக்குதல் மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவாது என்றும் ஃப்ளோரிடா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைத் தாக்கும் அமீபா - மூக்கின் வழியாக உடலில் நுழைந்து மூளையை பாதிக்குமாம்...
Image credits: CDC / YouTube
  • Share this:
அமெரிக்காவில் மூளையில் தொற்றை ஏற்படுத்தும் நெக்லீரியா ஃபோலெரி (Naegleria fowleri) என்னும் அரிய வகை அமீபாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ப்ளோரிடாவில் உள்ள ஹில்ஸ்போரோ கவுன்டியில் ஒருவருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வெதுவெதுப்பான நன்னீரில் காணப்படும் இந்த அமீபா மூக்கு வழியாக உடலுக்குள் நுழைந்து மூளையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

காய்ச்சல், குமட்டல், கழுத்து மற்றும் தலைவலி ஆகியவை இந்த அமீபாவின் அறிகுறிகள் எனச் சொல்லும் மருத்துவ வல்லுனர்கள் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வாரத்தில் உயிரிழக்க நேரிடும் என்று கூறுகின்றனர்.Also read... உலகத்துக்கே சீனா அழிவை ஏற்படுத்தியது - டிரம்ப் ஆவேசம்

ஆன்லைன் வகுப்புகள் - வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்தாகும் என அமெரிக்கா எச்சரிக்கைகடந்த 2009 லிருந்து 2018 வரை 34 பேருக்கு இந்நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவாது என்றும் ஃப்ளோரிடா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading