கடந்த வாரம் மான்டேரி துறைமுகத்தில் இருந்து ஒரு படகு சவாரியாக மான்டேரி விரிகுடாவிற்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் சுமார் 90 அடி நீளமுள்ள அரியவகை திமிங்கலங்களை நேரில் பார்த்ததாக தகவல் அளித்துள்ளனர். இதனால் மான்டேரி விரிகுடா பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
நீல திமிங்கலங்கள் பெரும்பாலும் கோடை மற்றும் இலையுதிர் காலங்களில் மான்டேரி விரிகுடாவில் காணப்படுகின்றன. ஜூன் முதல் அக்டோபர் வரை கலிபோர்னியா கடற்கரையில் தங்கள் இரையை தேடி அலைகின்றன. இந்த மாதங்களில் மான்டேரி பே தேசிய கடல் சரணாலயம் உட்பட கலிபோர்னியாவின் மத்திய கடற்கரை பகுதிகளில் சுமார் 2,000 நீல திமிங்கலங்கள் நீந்துகின்றன.
கலிபோர்னியா மத்திய கடற்கரையில் உலகின் மிகப்பெரிய நீல திமிங்கலங்கள் உள்ளன, மொத்தம் 10,000 பாலூட்டிகள் அங்கு இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மான்டேரி வே வேல் ஏஜென்சி ஃபேஸ்புக்கில் சில புகைப்படங்களை ஷேர் செய்திருந்தது. அந்த பதிவில், ப்ளூ வேல் மற்றும் ஹம்ப்பேக் திமிங்கலங்கள், டால்பின்கள் மற்றும் சீகல்ஸ் உள்ளிட்ட பல்வேறு நீர்வாழ் உயிரினங்களின் புகைப்படங்கள் இருந்தது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
ALSO READ | உலகின் வேகமான ரோலர் கோஸ்டரில் பயணித்தவர்களுக்கு எலும்புகள் முறிந்ததால் அதிர்ச்சி!
இதுகுறித்து பேசிய மான்டேரி வே வேல் ஏஜென்சி உரிமையாளரும், கடல் உயிரியலாளருமான சான் பிரான்சிஸ்கோ குரோனிக், பெரும்பாலான மக்கள் நீல திமிங்கலத்தை பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.
"நீல திமிங்கலங்கள் கண்டுபிடிக்க முடியாதவை. ஆனால் தற்போது கலிபோர்னியாவின் மத்திய கடற்கரை பகுதிகளில் உள்ளது தெரியவந்துள்ளது. நீலத் திமிங்கலங்கள் கடலில் நீந்தவும், கடற்கரையிலிருந்து சாப்பிடவும் விரும்புகின்றன. இதனால் நீலத் திமிங்கலங்களை பார்க்க சிறந்த வழி திமிங்கலத்தை பார்க்கும் சிறப்பு படகில் செல்வது. மோஸ் லேண்டிங் மற்றும் மான்டேரி ஆகிய சுற்றுலா நிறுவனங்கள் திமிங்கலத்தைப் பார்க்கும் பயணங்களை சிறப்பாக வழங்கி வருகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
ALSO READ | தாலிபான்களால் சுடப்பட்ட நிகழ்வை 9 ஆண்டுக்கு பிறகு நினைவுகூர்ந்த மலாலா!
மேலும் நீல திமிங்கலங்கள் பாலூட்டி வகைகளில் மிகவும் பெரியது, இவை ஒரு பேருந்தை விட இரண்டு மடங்கு நீளமானது என்றார். நீல திமிங்கலங்கள் 90 ஆண்டுகள் வரை உயிர்வாழும் மற்றும் 110 அடி வரை வளரும். ஆனால் பெரும்பாலான நீல திமிங்கலங்கள் கப்பல்களால் தாக்கப்படுகின்றன.
படகுகளில் திமிங்கலங்களை பார்க்க செல்லும் போது சுற்றுலாப்பயணிகள் திமிங்கலங்களைப் பார்க்கும் வகையில் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது, இதனால் திமிங்கலங்கள் நீந்தும் போது காயம் ஏற்படும் என்பதால், அவற்றின் ஆயுட்காலம் குறைகிறது. இந்த திமிங்கலங்கள் கப்பல்களிலிருந்து விலகி இருந்தால், அவற்றால் அதிக ஆண்டுகள் உயிர்வாழ முடியும் என்று சான் பிரான்சிஸ்கோ தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.