‘11 நிமிடம் தான் பாலியல் வன்புணர்வு செய்தார்’: குற்றவாளிக்கு தண்டனையை குறைத்து ஷாக் கொடுத்த பெண் நீதிபதி!

gang rape

குற்றவாளி ஏற்கனவே சிறை தண்டனை அனுபவித்து வருவதால் அவர் விரைவிலேயே விடுதலை ஆகக் கூடும் என செய்திகள் வெளியாகின.

  • Share this:
கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில், 11 நிமிடம் மட்டுமே குற்றவாளி பாலியல் வன்புணர்வு செய்தார் என்பதால் அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நீதிபதி ஒருவர் குறைத்திருப்பதால் வெகுண்ட எழுந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கத்திய நாடுகளில் ஒன்றான ஸ்விட்சர்லாந்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் ஐந்தில் ஒரு பெண் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம்னெஸ்டி அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பாலியல் வன்புணர்வு வழக்கில் தீர்ப்பளித்துள்ள பெண் நீதிபதி ஒருவர், குற்றவாளி 11 நிமிடம் மட்டும் தான் பாலியல் வன்புணர்வு செய்தார் எனக் கூறி அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைத்திருக்கிறார். அவரின் தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து மகளிர் அமைப்புகள் போராடி வருகின்றனர்.

Also Read: குளிக்கும் போது வீடியோ எடுத்து மிரட்டி பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த 81 வயது ரிடையர்ட் பேராசிரியர்!

ஸ்விட்சர்லாந்து நாட்டின் பசல் நகரில் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 33 வயதாகும் பெண் ஒருவரை அவரின் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வைத்தே இருவர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இருவரில் ஒருவருக்கு 17 வயது என்பதால் அவர் மீதான வழக்கை சிறார் நீதிமன்றம் தனியாக விசாரித்து வருகிறது. . அதே நேரத்தில் மற்றொருவரான போர்சுகலைச் சேர்ந்த 32 வயது இளைஞர் மீதான வழக்கை விசாரித்த பெண் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ள கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதோடு போராட்டத்துக்கும் வழிவகுத்துள்ளது.

Also Read:  வரதட்சணைக்காக கணவன் செய்த கொடூரச் செயல்!.. துயரத்தில் 27 வயது பெண்!

இந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பை வாசித்த அந்த பெண் நீதிபதி கூறுகையில், குற்றவாளி அந்த பெண்ணை 11 நிமிடம் மட்டுமே பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார். மேலும் அந்த பெண் இரவு விடுதியில் வைத்து அந்த இளைஞருக்கு சில சமிஞ்ஞைகளை முன்னவே கொடுத்திருக்கிறார். எனவே குறைந்த நேரமே குற்றம் நடந்திருப்பதாலும், ஸ்விஸ் சட்டதிட்டங்களுக்கு இணங்கி அந்த நபருக்கான தண்டனையை குறைப்பதாக தீர்ப்பளித்துள்ளார்.

rape


இதன் மூலம் குற்றவாளியின் தண்டனை 51 மாதங்களில் இருந்து 36 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. குற்றவாளி ஏற்கனவே சிறை தண்டனை அனுபவித்து வருவதால் அவர் விரைவிலேயே விடுதலை ஆகக் கூடும் என செய்திகள் வெளியாகின.

Also Read:   திடீரென மயங்கி விழுந்து  உயிருக்கு போராடும் கிறிஸ் கெய்ர்ன்ஸ்

குறைந்த நேரமே குற்றத்தில் ஈடுபட்டதாக கூறி குற்றவாளிக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை குறைத்ததற்கு எதிராக நூற்றுக்கணக்கிலான பெண்கள் பசல் நீதிமன்றத்தின் முன் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தீர்ப்பை கேள்விப்பட்ட அந்த பாதிக்கப்பட்ட பெண்ணும் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஸ்விட்சர்லாந்து சட்டப்படி இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நாட்டில் பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் வலுவாக இல்லை எனவும் பெண்கள் போராடி வருகிறார்கள்.
Published by:Arun
First published: