ராஜாவாக திரும்பிய ரணில் - மீண்டும் பிரதமராக பதவியேற்றார்!

நாடாளுமன்ற கலைப்பின் மூலம் மைத்திரிபால சிறிசேனா அரசியலமைப்பை மீறி சட்டவிரோதமாக செயல்பட்டார் என உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்தது.

ராஜாவாக திரும்பிய ரணில் - மீண்டும் பிரதமராக பதவியேற்றார்!
பிரதமராக பொறுப்பேற்ற ரணில் (Image: Twitter)
  • News18
  • Last Updated: December 16, 2018, 11:38 AM IST
  • Share this:
இலங்கை பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்றார். இதன்மூலம், இலங்கையில் கடந்த 50 நாட்களாக நிலவிய அரசியல் ஸ்திரமற்ற நிலை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே, அதிபர் மைத்திரிபால சிறிசேனாவால் கடந்த அக்டோபரில் பதவிநீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சேவை சிறிசேனா நியமித்தார்.

நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டதால், நாடாளுமன்ற அமர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தொடர்ந்து கட்சி தாவல் சம்பவங்களும் நடைபெற்றன. இதன் காரணமாக நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அதிபர் சிறிசேனா அறிவித்தார்.


Mahinda Rajapaksa | இலங்கை பிரதமர் ராஜபக்ச
இலங்கை பிரதமர் ராஜபக்ச


நாடாளுமன்ற கலைப்பு நடவடிக்கையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணியினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

பின்னர், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை  பிறப்பித்தது. இதன் காரணமாக நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜெயசூரியா தலைமையில் மீண்டும் கூட்டப்பட்டது. அப்போது நாடாளுமன்றத்தில் பதற்றம் நிலவியது.ராஜபக்சே, விக்ரமசிங்கே ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பின்னர் ராஜபக்சே அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் 2 முறை நிறைவேறியது.

நாடாளுமன்ற கலைப்பின் மூலம் மைத்திரிபால சிறிசேனா அரசியலமைப்பை மீறி சட்டவிரோதமாக செயல்பட்டார் என உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்தது.

இதன் தொடர்ச்சியாக மஹிந்த ராஜபக்சே நேற்று பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.  புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கே இன்று 5-வது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருக்கு அதிபர் சிறிசேனா பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.

வாழ்நாளில் ரணிலை பிரதமராக நியமிக்கவே மாட்டேன் என்று சிறிசேனா தொடர்ந்து கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see..

First published: December 16, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்