Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /உலகம் /

“இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு... 13வது திருத்தச் சட்டம் அமல்” ரணில் விக்கிரமசிங்கே உறுதி

“இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு... 13வது திருத்தச் சட்டம் அமல்” ரணில் விக்கிரமசிங்கே உறுதி

ரணில் விக்ரமசிங்கே

ரணில் விக்ரமசிங்கே

அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வாழும் நாட்டை கட்டமைக்க விரும்புவதாக ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • interna, IndiaSrilankaSrilanka

இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும், 13வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்த உள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே உறுதி அளித்துள்ளார்.

தமிழர் திருநாளையொட்டி யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கையின் தெற்கு பகுதி மக்களும் குரல் கொடுப்பதாக கூறினார். எனினும், தமிழர்கள், மலையக தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு உள்ள பிரச்னைகள் குறித்து ஆராய முயற்சிப்பதாகவும், இதுதொடர்பாக, அரசியல் தலைவர்களை கலந்தாலோசிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வாழும் நாட்டை கட்டமைக்க விரும்புவதாக கூறியுள்ள அவர், ஓரிரு ஆண்டுகளில் படிப்படியாக அமுல்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ரணில் விக்கிரமசிங்கே யாழ்ப்பாணம் சிவன் கோயியிலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராடினர். போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். இதனால் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை கலைத்தனர்.

First published:

Tags: Srilanka, Srilankan Tamil, Tamils