இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: மோடி, ரணில் விக்ரமசிங்கே கண்டனம்

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் 160 பேர் உயிரிந்துள்ளதாக தகவல் வெளியாகியிள்ளது

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: மோடி, ரணில் விக்ரமசிங்கே கண்டனம்
இலங்கை
  • News18
  • Last Updated: April 21, 2019, 2:10 PM IST
  • Share this:
குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹே, இந்திய பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஈஸ்டர் பண்டிகையையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறன. இந்நிலையில் இலங்கையில் நட்சத்திர ஹோட்டல், தேவாலயங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் இன்று காலை நடந்த குண்டு வெடிப்பில் 160 பேர் உயிரிந்துள்ளதாக தகவல் வெளியாகியிள்ளது. பலர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹே கண்டனம் தெரிவித்துள்ளார். ‘மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த சூழ்நிலையில் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நிலைமையை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது’ என்று கூறியுள்ளார்.




இதுதொடர்பாக இந்திய பிரதமர் மோடி, ‘இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். இதுபோன்ற காட்டுமிராண்டித்தனத்திற்கு இங்கு இடமில்லை. இலங்கை மக்களுடன் இந்தியா துணை நிற்கும். குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்



Also watch

First published: April 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading