Home /News /international /

சவுதி, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் ரமலான் நோன்பு தொடங்கியது... மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனை

சவுதி, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் ரமலான் நோன்பு தொடங்கியது... மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனை

புனித மெக்கா மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகை

புனித மெக்கா மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகை

இந்தியாவில் இன்று மாலை சிறப்பு பிரார்த்தனைகளுடன் நாளை நோன்பு ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், பாலஸ்தீன் உள்ளிட்ட நாடுகளில் ரமலான் நோன்பு தொடங்கியது.

ஒவ்வொரு இஸ்லாமிய ஆண்டின்போதும் ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பை கடைபிடித்து வருகின்றனர். கொள்கை, தொழுகை ஆகிய இரு பெரும் கடமைகளை அடுத்து 3வது கடைபிடிக்கப்படும் கடமையாக நோன்பு உள்ளது.

ரமலான் மாதத்தில்தான் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆன், இறைவனிடம் இருந்து அவரது தூதர் முகம்மது நபிக்கு, வானவர் ஜிப்ரீல் மூலம் முதன்முறையாக அருளப்பட்டது. இதன் காரணமாக ரமலான் புனித மாதமாக முஸ்லிம்களால் கருதப்படுகிறது.



ஆங்கில ஆண்டுடன் ஒப்பிடும்போது இஸ்லாமிய ஆண்டு ஒவ்வொரு முறையும் 11 நாட்கள் குறையும். கடந்த 2021-ல் ஏப்ரல் மாதம் 13-ம்தேதி ரமலான் தொடங்கிய நிலையில், சவுதி, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் ரமலான் நோன்பு இன்று தொடங்கியது.

நேற்று மாலை ஷவ்வால் (ரமலானுக்கு முந்தைய இஸ்லாமிய மாதம்)பிறை தென்பட்டதால், நேற்றிரவு சிறப்பு பிரார்த்தனைகள் சவுதியின் புனித மக்கா உள்ளிட்ட மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இந்நிலையில் இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கியுள்ளது.



இந்தியாவில் இன்று மாலை சிறப்பு பிரார்த்தனைகளுடன் நாளை நோன்பு ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோன்பு விதிப்படி, சூரியன் உதயமாகும் நேரத்தில் இருந்து மறையும் வரை நீர், உணவு என எதையும் உண்ணக்கூடாது.

சூரியன் உதயமாகுவதற்கு முன்பாக உண்ணப்படும் உணவை சஹர் என்று அழைப்பார்கள். நோன்பை முடித்துக் கொள்ளும் போது அருந்தும் உணவு நடைமுறைக்கு இஃப்தார் என்று பெயர். இந்தாண்டு மே 2 அல்லது 3ம்தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Musthak
First published:

Tags: Ramzan

அடுத்த செய்தி