ராஜபக்சே அரசின் மீது நவ.14-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு!

வரும் 14-ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடும்போது ராஜபக்சே அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது.

news18
Updated: November 7, 2018, 10:31 PM IST
ராஜபக்சே அரசின் மீது நவ.14-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு!
ராஜபச்சே
news18
Updated: November 7, 2018, 10:31 PM IST
நவம்பர் 14-ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடும்போது மஹிந்த ராஜபக்சே தலைமையிலான புதிய அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டதால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக கொழும்புவில் அரசியல் கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் கரு ஜெயசூர்யா ஆலோசனை நடத்தினார்.

அப்போது முரண்பட்ட கருத்துகளை பல்வேறு கட்சியினரும் தெரிவித்தனர். இறுதியில், ஏற்கெனவே 116 உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதின் கீழ், நாடாளுமன்றம் கூட்டப்படும் 14-ம் தேதியே ராஜபக்சே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என சபாநாயகர் முடிவு செய்தார். இதன்படி, வரும் 14-ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடும்போது ராஜபக்சே அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது.

Also watch

First published: November 7, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்