பதவியை முடக்கிய நீதிமன்றம் - மேல்முறையீடு செய்யும் ராஜபக்சே

225 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றாலும், பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க முடியாது என்று அதிபர் சிறிசேனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பதவியை முடக்கிய நீதிமன்றம் - மேல்முறையீடு செய்யும் ராஜபக்சே
ராஜபக்ச
  • News18
  • Last Updated: December 4, 2018, 8:29 AM IST
  • Share this:
இலங்கையில் மகிந்தா ராஜபக்ச தலைமையிலான அரசு செயல்படுவதற்கு தடைவிதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் இன்று மேல் முறையீடு செய்யப் போவதாக ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

இலங்கையில் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கே-வை நீக்கிவிட்டு, மகிந்தா ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா நியமித்தது முதலே அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

ராஜபக்சேவை நியமித்ததற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.


இதனை விசாரித்த நீதிபதிகள், பிரதமராக மகிந்தா ராஜபக்ச செயல்படவும், அமைச்சர்கள் பணியாற்றவும் தடைவிதித்து நேற்று உத்தரவிட்டனர்.

இதுதொடர்பாக பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் 12-ம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். நீதிமன்றத்தின் முடிவை ஏற்க மறுத்துள்ள ராஜபக்சே உச்சநீதிமன்றத்தில் இன்று மேல் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் மைதிரிபால சிரிசேனா
இந்நிலையில், அதிபர் சிறிசேனாவை ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த பிரதிநிதிகள் 2-வது முறையாக நேற்று சந்தித்துப் பேசினர். ஆனால், இந்த சந்திப்பில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை நியமிக்க அதிபர் சிறிசேனா மறுத்துவிட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பி., லட்சுமணன் கிரீலா தெரிவித்தார்.

225 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றிருந்தாலும், ரணில் விக்ரமசிங்கேவை பிரதமராக நியமிக்க முடியாது என்று சிறிசேனா தெரிவித்ததாக மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக, அதிபர் சிறிசேனாவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியது.

இதனை ஏற்றுக் கொண்ட அதிபர், இந்த மாதிரியான பிரச்சினைகளுக்கு பல்வேறு நாடுகளிலும் அரசியல் தீர்வு எட்டப்பட்டதைப் போன்று, தேசிய பாதுகாப்பு சபை உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி 2 வாரத்தில் முடிவை எடுப்பதாக கூறியதாக எம்.பி.க்கள் தெரிவித்தனர்.

Also see...

First published: December 4, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading