சீனாவில் மழை பெய்த போது லட்சக் கணக்கான புழுக்களும் விழுந்ததால் சாலையெங்கும் புழுக்கள் படையெடுத்துள்ளன. எதனால் இப்படி புழு மழை பெய்தது என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
சீனா அண்மைக் காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் வர்த்தகம், பருவநிலை, நோய்த் தொற்று என பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறது சீனா. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்டு உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா நோய் கிருமிகூட சீனா திட்டமிட்டு பரவ விட்டது என அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன.
ஆனால் அதை சீனா திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்நிலையில் திடீரென்று ஒரு நாள் பெய்ஜிங்கில் புழுக்கள் மழை பெய்தது. அவற்றில் பூச்சிகளும் இருந்ததாக சில ஊடகங்கள் கூறுகின்றன, மழைக்குப் பிறகு நகரின் தெருக்களில் பல இடங்களில், வாகனங்கள், கடைகள் மற்றும் தெருக்களில் புழுக்கள் அதிக அளவில் தோன்றியதால் மக்களும் அச்சமடைந்ததாக சீன ஊடகங்கள் தெரிவித்தன. இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் மிகவும் வைரலாகி வருகின்றன.
Read More : பெண்கள் இனி மேலாடை இன்றி குளிக்கலாம்... ஜெர்மனி அரசு தந்த அனுமதி..!
நம்மை குழப்பிய அல்லது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வுகளில் ஒன்று சீனாவில் நிகழ்ந்துள்ள புழு மழை. மழை பெய்த போது மழைநீரோடு சேர்ந்து புழுக்களும் கொட்டியுள்ளது. மழையால் நனைந்த நகரின் தெருக்களில் பல இடங்களில் வாகனங்கள், கடைகள், தெருக்களில் புழுக்கள் கூட்டம் அலைமோதுவதால் மக்களும் அச்சமடைந்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவை புழுக்கள் இல்லை என்றும், கம்பளிப் பூச்சிகள் என்றும் கூறப்படுகிறது.
வசந்த காலத்தின் தொடக்கத்தில் இது போன்ற நிகழ்வுகள் நிகழ்வது சாதாரணம் தான் என சிலர் கூறினாலும், மக்கள் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. எதனால் இப்படி நிகழ்ந்தது என்பது குறித்து பருவநிலை தொடர்பான வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
பலத்த காற்று அடிக்கும் போது, எங்காவது வனப்பகுதியில் கூட்டம் கூட்டமாக இருந்த புழுக்கள் அடித்து வரப்பட்டு இப்படி கொட்டியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சீனாவில் புழு மழை பெய்தது என சமூக ஊடகங்களில் வீடியோக்களும், அது தொடர்பான கருத்துக்களும் பெருமளவில் வைரலாகி வருகிறது. வரும் காலத்தில் இன்னும் என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ சீனாவில்….
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.