• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • RAGGING : பிரான்சில் விமானப்படை அதிகாரிக்கு ராகிங்-விசாரணை துவக்கிய ராணுவம்

RAGGING : பிரான்சில் விமானப்படை அதிகாரிக்கு ராகிங்-விசாரணை துவக்கிய ராணுவம்

விமானப்படை அதிகாரி

விமானப்படை அதிகாரி

பிரான்சில் துப்பாக்கிச் சுடும் இலக்காக விமானப்படை பைலட்டை நிற்க வைத்து சக ராணுவ வீரர்கள் ராகிங்கில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
பிரான்சில் விமானப்படை தளத்துக்கு புதிதாக சென்ற பைலட் ஒருவரை துப்பாக்கிச்சுடும் இலக்காக நிற்க வைத்து, மற்ற ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு ராகிங்கில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பைலட் புகார் பதிவு செய்துள்ளார். ராணுவ அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், தற்போது வழக்கறிஞர் மூலம் வழக்கு தொடுத்துள்ளார். விமானப்படை பைலட்டுக்கு நேர்ந்துள்ள அவமானம் அந்நாட்டில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பைலட் புகார் குறித்து பேசிய விமானப்படை ராணுவ செய்தித்தொடர்பாளர் கலோனல் ஸ்டீபன் ஸ்பெட், இதுதொடர்பாக உள்விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். புகார் அளித்தவர் யார்? எத்தனை விமானப்படை வீரர்கள் ராகிங்கில் ஈடுபட்டனர்? என்ற விவரத்தை வெளியிடாத அவர், கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். மேலும், புகார் அளித்த பைலட் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என ஸ்டீபன் விளக்கமளித்தார்.

புகார் அளித்த பைலட்டின் வழக்கறிஞர், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் புகார் குறித்த விவரங்களை பகிர்ந்துள்ளார். 2019ம் ஆண்டு கோர்சிகா தீவில் உள்ள சோலன்ஜாரா (Solenzara) விமானப்படை தளத்துக்கு காம்பாக்ட் பைட்டர் ஜெட்டில் பைலட் சென்றுள்ளார். அவர் அங்கு இறங்கியவுடன், துணி ஒன்றைபோட்டு அவர் தலையை மூடிய மற்ற விமானப்படை வீரர்கள், கம்பம் ஒன்றில் கை, கால்கள் என அனைத்தையும் நைலான் கயிறு கொண்டு கட்டிவைத்துள்ளனர். பின்னர், அங்கிருக்கும் பைட்டர் ஜெட்களில் பறந்த வீரர்கள், ஆயுதங்களை பயன்படுத்தி பைலட்டின் தலைக்கு மேலாக சரமாரியாக குண்டுமழை பொழிந்துள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த பைலட், இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களை சேகரித்து, தனக்கு நேர்ந்த மிகவும் அவமானகரமான செயல் குறித்து ராணுவ அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். ஆனால், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கபடாததையடுத்து வழக்கறிஞர் மூலம் விமானப்படை அதிகாரிகளின் கவனத்துக்கு புகாரை எடுத்துச் சென்றதுடன், ராயிட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடமும் தகவலை பகிர்ந்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயம் என்பதால் ராய்ட்டர்ஸ் நிறுவனமும் ஒரு சில புகைப்படங்களைத் தவிர மற்றவைகளை வெளியிடாமல், செய்தியாக்கியுள்ளது. இந்த செய்தி அந்நாட்டில் தற்போது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

AlsoRead: வீட்டை கொரோனா வைரஸிடமிருந்து பாதுகாக்க கிருமிநாசினிகளை அதிகம் பயன்படுத்துகிறீர்களா..? கெமிக்கல் ஆபத்து என எச்சரிக்கும் மருத்துவர்கள்..!

இது குறித்து விளக்கமளித்துள்ள விமானப்படை செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன், பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் இதில் இருப்பதால் கூடுதல் தகவல்களை வெளிப்படையாக கூறமுடியாது என தெரிவித்தார். தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களின் உண்மைத் தன்மை குறித்தும் பேச மறுத்த அவர், பைலட் கூறியது போல் அவரைக் கட்டிவைத்து ஆயுதங்களால் மற்ற வீரரர்கள் சுடவில்லை என்ற விளக்கமளித்துள்ளார். விமானப்படையின் வழக்கமான ராணுவ பயிற்சிகள் நடந்து கொண்டிருந்ததாகவும், பைலட்டின் கண்கள் கட்டப்பட்டிருந்ததால், தவறாக அவர் புரிந்து கொண்டதாகவும் ஸ்டீபன் கூறியுள்ளார்.

AlsoRead:சேட்டை செய்யும் குறும்புக்கார பிள்ளைகளை எப்படி கையாள்வது? பெற்றோர்களுக்கான டிப்ஸ்!
 ராணுவ பகுதியில் தடை செய்யப்பட்ட இதுபோன்ற கீழ்தரமான செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என எச்சரித்துள்ள பிரான்ஸ் ராணுவம், உடல் மற்றும் மனம் சார்ந்த துன்புறுத்தல்கள் செய்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. பைலட்டின் வழக்கறிஞர் பேசும்போது, 2 ஆண்டுகளைக் கடந்தும் விமானப்படை அதிகாரிகள் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். தன்னுடைய தரப்பு புகார்தாரரான பைலட் தொடர்ந்து விமானப்படையில் பணியாற்றி வருவதாகவும் விளக்கமளித்தார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: