முகப்பு /செய்தி /உலகம் / பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல்நிலை கவலைக்கிடம்... அரண்மனைக்கு விரைந்த குடும்பத்தினர்

பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல்நிலை கவலைக்கிடம்... அரண்மனைக்கு விரைந்த குடும்பத்தினர்

ராணி எலிசபெத்

ராணி எலிசபெத்

வழக்கமாக பக்கிங்ஹாம் அரண்மணையில், புதிய பிரதமரை சந்திக்கும் ராணி, இம்முறை பால்மாரல் அரண்மனையில் சந்தித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inte, Indiascotlandscotlandscotlandscotlandscotlandscotland

பிரிட்டன் மகாராணி எலிசபெத்துக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் தங்கியுள்ள 96 வயதான மகாராணி எலிசபெத்திற்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தீவிர கண்காணிப்பில் வைக்கும்படி அறிவுறுத்தினர். ராணியின் குடும்பத்தினர் அனைவரும் பால்மாரல் அரண்மனைக்கு விரைந்தனர்.

உடல் நல குறைவால், புதன் கிழமை நடைபெற்ற அமைச்சர்களின் ஆலோசனையிலும் அவர் பங்கேற்கவில்லை. வழக்கமாக பக்கிங்ஹாம் அரண்மணையில், புதிய பிரதமரை சந்திக்கும் ராணி, இம்முறை பால்மாரல் அரண்மனையில் சந்தித்தார்.

பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ், வெளியிட்டுள்ள அறிக்கையில் ராணிக்கு உடல் நிலை சரியில்லை என்ற தகவல் நாட்டு மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Britain, Health issues, Queen