உள்நாட்டுக் கலவர பீதியால் லண்டனைவிட்டு வெளியேறும் ராணி!

பாதுகாப்புக் காரணங்களுக்காக அரச குடும்பத்தினரின் இருப்பிடம் ரகசியமாக வைத்திருக்கப்படும் என்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

உள்நாட்டுக் கலவர பீதியால் லண்டனைவிட்டு வெளியேறும் ராணி!
ராணி எலிசபெத்- ஃபிலிப்
  • News18
  • Last Updated: February 4, 2019, 10:43 AM IST
  • Share this:
மார்ச் மாதம் ப்ரெக்ஸிட் விவகாரம் பூதாகரமானால் உள்நாட்டில் கலவரம் வெடிக்கும் சூழல் ஏற்படும் என்பதால் பிரிட்டன் ராணி எலிசபெத் மற்றும் அவரது ஃபிலிப் உள்ளிட்ட முக்கிய அரசவைக் குட்ம்ப உறுப்பினர்கள் லண்டனைவிட்டு வெளியேறும் சூழல் உருவாகி உள்ளது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான ப்ரெக்ஸிட் ஒப்பந்தம் நிறைவேறாமல் தொங்கலில் நீடிக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு நடந்த வாக்கெடுப்பில் அதிகப்பட்ச மக்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்து இருந்தனர்.

ஆனால், ஐரோப்பிய யூனியனிலும் பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் தொடரும் பிர்ச்னைகள் காரணமாக ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. பிரதமர் தெரேசா மே கொண்டுவந்த நாடாளுமன்ற பொது வாக்கெடுப்பிலும் அவரது சொந்தக் கட்சியிலேயே ஆதரவு கிடைக்கவில்லை.


இதையடுத்துப் பிரதமர் தெரேசா மே மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம், இறுதியில் தோல்வியிலேயே முடிந்தது.

இவ்வாறு ப்ரெக்ஸிட் விவகாரம் பூதாகரம் எடுத்துள்ள வேளையில் முன்னர் அறிவித்ததன் அடிப்படையில் மார்ச் 29-ம் தேதி பிரெக்ஸிட் வெளியேறினாலும் வெளியேறாவிட்டாலும் உள்நாட்டுக் கலவரங்கள் வெடிப்புக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் அரசவைக் குடும்பத்தைச் சேர்ந்த ராணி எலிசபெத் மற்றும் அவரது கணவர் ஃபிலிப் உள்ளிட்ட முக்கிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் லண்டனை விட்டு வெளியேறி வேறு ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட உள்ளனர் எனக் கூறப்படுகிறது. பாதுகாப்புக் காரணங்களுக்காக அரச குடும்பத்தினரின் இருப்பிடம் ரகசியமாக வைத்திருக்கப்படும் என்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.மேலும் பார்க்க: மம்தா பாணர்ஜி VS சிபிஐ - மேற்கு வங்கத்தில் நடப்பது என்ன?
First published: February 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்