Home /News /international /

70 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்து மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் - அரண்மனை முன்பு மக்கள் கண்ணீர் அஞ்சலி..

70 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்து மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் - அரண்மனை முன்பு மக்கள் கண்ணீர் அஞ்சலி..

இரண்டாம் எலிசபெத்

இரண்டாம் எலிசபெத்

Queen Elizabeth II : கணவர் பிலிப் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில் கடந்த சில நாட்களாக ராணி எலிசபெத்தின் உடல்நிலையும் மோசமானது. ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோர் அரண்மனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Internati, India Balmoral Castle Balmoral Castle Balmoral Castle
    இங்கிலாந்து வரலாற்றில் மிக நீண்ட காலமாக மகாராணியாக இருந்து முடியாட்சி நடத்திய ராணி இரண்டாம் எலிசபெத் நேற்று பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 96.

    1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி இங்கிலாந்து அரச குடும்பத்தில் பிறந்தவர் எலிசபெத் அலெக்சேன்ட்ரா மேரி.அவர் பிறந்தபோது இங்கிலாந்தை அவரது தாத்தா ஐந்தாம் ஜார்ஜ் ஆண்டு கொண்டிருந்தார். அவர் 1936-ல் மரணமடைந்தபோது மன்னராக மூத்த மகன் எட்டாம் எட்வர்டு அரியணை ஏறினார். ஆனால் குறுகிய காலத்திலேயே தன்னுடைய காதலுக்காக மன்னர் பதவியைத் துறந்தார்.

    அதைத் தொடர்ந்து எலிசபெத்தின் தந்தையான ஆல்பர்ட் ஆறாம் ஜார்ஜ் என்ற பெயருடன் மன்னரானதும் 10 வயதில் பட்டத்து இளவரசி ஆனார் எலிசபெத். 1952 ஆம் ஆண்டில் தந்தை மறைந்ததும் இங்கிலாந்தின் ராணியாக முடிசூடினார் இரண்டாம் எலிசபெத்.

     

    70 ஆண்டு காலம் இங்கிலாந்தை ஆண்ட எலிசபெத் அந்நாட்டு வரலாற்றில் அதிக ஆண்டுகள் ஆண்ட ராணி என்ற பெருமையைப் பெற்றவர், கிரேக்கம் மற்றும் டென்மார்கின் இளவரசராக இருந்த பிலிப்புடன் காதல் கொண்ட நிலையில் தனது பட்டத்தை துறந்து 1947-ல் ராணி எலிசபெத்தின் கரம் பற்றினார் பிலிப்.

    கணவர் பிலிப் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில் கடந்த சில நாட்களாக ராணி எலிசபெத்தின் உடல்நிலையும் மோசமானது. ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோர் அரண்மனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வியாழக்கிழமை ராணியின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து, அவரது குடும்பத்தினர் பால்மோரல் எஸ்டேட்டில் கூடினர்.

    இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் அவர் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை நேற்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டது.அதைத் தொடர்ந்து அரண்மனையிலும், அரசு அலுவலகங்களிலும் அந்நாட்டு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.பால்மோர், பக்கிங்காம், விண்ஸர் அரண்மனைகளுக்கு வந்த மக்கள் ராணி எலிசபெத்துக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    Also Read: பிரிட்டன் ராணி எலிசபெத் காலமானார் - பக்கிங்ஹாம் அரண்மணை அறிவிப்பு

    ராணி எலிசபெத் மறைந்ததுமே அவரது 73 வயது மகன் சார்லஸ் மன்னர் ஆனார். அவர் மூன்றாம் சார்லஸ் மன்னர் என அழைக்கப்படுவார். மன்னர் சார்லஸ் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் தனது அன்பிற்குரிய தாய் ராணி எலிசபெத்தின் மரணம் தனக்கும் குடும்பத்தாருக்கும் மிகப் பெரும் சோகம் என்றும் அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    ராணி எலிசபெத்தின் உடல் எடின்பர்கில் உள்ள அரண்மனைக்கு கொண்டு செல்லப்படும், பின்னர் லண்டன் பக்கிங்காம் அரண்மனை கொண்டு செல்லப்பட்டு 10-வது நாளில் அடக்கம் செய்யப்படும்.

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: BRITISH RULE, England, Queen, Queen Elizabeth

    அடுத்த செய்தி