ஹோம் /நியூஸ் /உலகம் /

60 வருடங்களில் முதல் முறை - மூப்பு காரணமாக நாடாளுமன்ற விழாவை புறக்கணித்த எலிசபெத் ராணி

60 வருடங்களில் முதல் முறை - மூப்பு காரணமாக நாடாளுமன்ற விழாவை புறக்கணித்த எலிசபெத் ராணி

96 வயதான எலிசபெத் ராணி மூப்பு காரணமாக இந்தாண்டு முதல் முறையாக நாடாளுமன்ற தொடக்க விழா நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பிரிட்டன் நாட்டின் நாடாளுமன்ற கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், 60 வருடங்களில் முதல் முறையாக தொடக்க விழா உரையை இங்கிலாந்து ராணி எலிசபெத் நிகழ்த்தவில்லை. 96 வயதான ராணி மூப்பு காரணமாக இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து, இந்த ஆண்டு பிரிட்டன் நாடாளுமன்ற உரையை எலிசபெத் ராணியின் மகன் இளவரசர் சார்லஸ் நிகழ்த்தினார்.

  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் ராணி எலிசபெத் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் இவர் பொது நிகழ்வில் ஏதும் கலந்துகொள்வதில்லை. தனது 70 ஆண்டுகால பொது வாழ்வில் 1959, 1963ஆம் ஆண்டு ஆகியவற்றில் மட்டும் தான் இந்த நிகழ்வில் பங்கேற்றதில்லை. இந்த இரு ஆண்டுகளிலும் இவர் கர்ப்பமாக இருந்துள்ளார்.

  ஆண்டுதோறும் இந்த விழாவில் ராணி சராட் வண்டியில் வந்து, பாதுகாவலர்கள் சீருடையில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்துவதை காண பலரும் திரளுவது வழக்கமாகும். நாடாளுமன்றத்தில் நுழைந்து அங்குள்ள தனது அரியணையில் அமர்ந்து அரசின் ஆண்டு திட்டங்களை ராணி வாசிப்பார். இந்தாண்டு இளவரசர் சார்லஸ் ராணியின் உரையை வாசித்து, ஒவ்வொரு மசோதாவையும், ராணியின் இந்த அரசு மேற்கொள்ளும் என கூறினார்.

  இதையும் படிங்க: அலுவலத்திற்கு வந்து வேலை பார்க்க சொன்ன ஆப்பிள் நிறுவனம் - ஆத்திரத்தில் முன்னணி ஊழியர் ராஜினாமா

  இந்தாண்டு ராணியின் பிறந்தநாளும், அவர் அரியணையில் ஏறிய 70ஆவது ஆண்டும் ஒன்றாக வருகிறது. இதையடுத்து இங்கிலாந்தில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் இந்த நிகழ்வை கோலாகலமாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Britain, Queen