Home /News /international /

இரண்டாம் எலிசபெத் ராணி இறுதிச் சடங்கிற்கு அழைக்கப்படாத நாடுகளின் லிஸ்ட் இதோ!

இரண்டாம் எலிசபெத் ராணி இறுதிச் சடங்கிற்கு அழைக்கப்படாத நாடுகளின் லிஸ்ட் இதோ!

இரண்டாம் எலிசபெத் ராணி இறுதிச் சடங்கு

இரண்டாம் எலிசபெத் ராணி இறுதிச் சடங்கு

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு திங்கள்கிழமை செப்டம்பர் 19ம் நாள் காலை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உலகின் பல நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • international, IndiaLondon London
    இரண்டாம் எலிசபெத் ராணிக்கு மாநில அளவிலான இறுதிச் சடங்கை இங்கிலாந்து அரச குடும்பம் ஏற்பாடு செய்துள்ளது. ராணியின் இறுதிச் சடங்கில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். முக்கிய தலைவர்கள் ஒரே இடத்தில் இணையும் ஒரு தருணமாக நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஒரு சில நாடுகள் மறுக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு நடைபெறும் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் சுமார் 2000 பேர் வரை கலந்துகொள்ளலாம்.

    உலக அரச குடும்பத்தினர்:

    ராணியில் இறுதிச் சடங்கில் உலக அரச குடும்பத்தைச் சேர்த்தவர்கள் பங்கு பெறுகின்றனர். ஜப்பான் நாட்டு அரசர் நருஹிட்டோ மற்றும் அரசி மசாகோ கலந்துகொள்வார்கள். டச்சு நாட்டிலிருந்து ராஜா வில்லெம்-அலெக்சாண்டர், ராணி மாக்சிமா, இளவரசர் பீட்ரிக்ஸ் கலந்துகொள்கின்றனர்.

    மேலும் பெல்ஜிய மன்னர் பிலிப், நார்வேயின் அரசர் ஐந்தாம் ஹரால்ட் மற்றும் மனக்கோ இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் போன்றவர்கள் கலந்துகொள்கின்றனர். டென்மார்க்கின் ராணி மார்கிரேத், ஸ்பெயினின் மன்னர் ஆறாம் ஃபிலிப் ஆகியோரும் கலந்துகொள்வதாகக் கூறப்பட்டுள்ளது.

    உலக தலைவர்கள்:

    அமெரிக்கா பிரதமர் ஜோ பைடன் மற்றும் அவரின் மனைவி ஜில் பைடன் ஆகியோர்க்கு அழைப்பு விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இருவரும் ராணியில் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கலந்துகொள்கிறார்.

    துருக்கி பிரதமர் ரெசெப் தயிப் எர்டோகன், பிரேசில் பிரதமர் ஜெய்ர் போல்சனாரோ, ஐரோப்பிய ஆணைக்குழு தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

    மேலும் சில முக்கிய தலைவர்களான இத்தாலி பிரதமர் செர்ஜியோ மேட்டரெல்லா, ஜெர்மனி பிரதமர் ஃபிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர், இஸ்ரேல் பிரதமர் ஐசக் ஹெர்சாக் , அயர்லாந்தின் பிரதமர் மைக்கேல் மார்ட்டின் மற்றும் தென்கொரியா பிரதமர் யூன் சுக்-யோல் பங்கேற்கின்றனர்.

    காமன்வெல்த் நாடுகள்:

    பிரிட்டிஷ்யை தலைமையாகக் கொண்டுள்ள நாடுகளில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கலந்துகொள்கின்றனர்.

    மேலும் தென் ஆப்பிரிக்கா பிரதமர் சிரில் ரமபோசா, மேற்கு வங்காளம் பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே மற்றும் பிஜிய பிரதமர் ஃபிராங்க் பைனிமராமா.பங்கேற்கின்றனர்.

    கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சீனாவின் துணை ஜனாதிபதி வாங் கிஷான் ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்கவுள்ளார்.

    Also Read : மைக் அணிய படாதபாடு பட்ட பாகிஸ்தான் பிரதமர்..வாய் விட்டு சிரித்த புதின்..வைரலாகும் வீடியோ

    இந்தியா :

    இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் பங்கேற்கிறார் என்று அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும் இந்தியா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பதாகத் தெரிவித்துள்ளனர்.

    அழைக்கப்படாத நாடுகள்:

    உக்ரைன் ரஷ்யா போர் காரணத்தினால் ரஷ்யாவிற்கு அழைப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேலும் பெலாரஸ், மியான்மர் மற்றும் வடகொரியா நாடுகளுக்கு அழைப்பு விடப்படவில்லை.
    Published by:Janvi
    First published:

    Tags: Funeral, Queen Elizabeth

    அடுத்த செய்தி