Home /News /international /

ராணி எலிசபெத் அரியணை ஏறி 70 ஆண்டுகள்: பிரிட்டனில் கோலாகலம்

ராணி எலிசபெத் அரியணை ஏறி 70 ஆண்டுகள்: பிரிட்டனில் கோலாகலம்

எலிசபெத் ராணி

எலிசபெத் ராணி

பிரிட்டன் மக்களாலும் மிகவும் நேசிக்கப்படும் இரண்டாம் எலிசபெத்துக்கு வயது 96. ராணியாக அவர் அரியணையில் அமர்ந்து, 70 ஆண்டுகள் ஆவதையொட்டி பக்கிங்ஹாம் அரண்மனையில் பல்வேறு விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து ராணியாக இரண்டாம் எலிசபெத் பதவியேற்று 70 ஆண்டுகள் ஆனதையொட்டி, பக்கிங்ஹாம் அரண்மனை விழாக்கோலம் பூண்டுள்ளது. உடல்நலனை கருத்தில் கொண்டு 2ம் நாள் நிகழ்ச்சியில் ராணி எலிசபெத் பங்கேற்கவில்லை. ராணி எலிசபெத்திற்கு வயது 96. மூப்பு காரணமாக வெளியே பயணம் செய்ய இயலாத காரணத்தால் இவர் இந்த விழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை என அரண்மனை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

    1926ம் ஆண்டு லண்டனில் அரச குடும்பத்தில் பிறந்த இரண்டாம் எலிசபெத், 1953ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி தமது 27வது வயதில் அரியணை ஏறினார். அரச குடும்பத்தினராலும், பிரிட்டன் மக்களாலும் மிகவும் நேசிக்கப்படும் இரண்டாம் எலிசபெத்துக்கு வயது 96. இந்நிலையில், ராணியாக அவர் அரியணையில் அமர்ந்து, 70 ஆண்டுகள் ஆவதையொட்டி பக்கிங்ஹாம் அரண்மனையில் பல்வேறு விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அரண்மனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மின் விளக்கை ஒளிரூட்டி ராணி இரண்டாம் எலிசபெத் விழாவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இளவரசர் வில்லியம்ஸ், அவரது மனைவி கேத், இளவரசர் ஹாரி, அவரது மனைவி மேகன் மார்க்கெல் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    விழாக்கோலம் பூண்டுள்ள லண்டன் நகரின் முக்கிய கட்டடங்கள், பாலங்கள் ஆகியவை மின்னொளியில் ஜொலித்தன. நான்கு நாட்கள் பல்வேறு விழாக்கள் நடைபெறும் நிலையில், இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை பக்கிங்ஹாம் அரண்மனை முன் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியே கோலாகளமாக காட்சி அளித்து. எனினும், ST.pauls தேவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நன்றி செலுத்தும் நிகழ்ச்சியில், உடல்நிலையை கருத்தில் கொண்டு ராணி இரண்டாம் எலிசபெத் பங்கேற்கவில்லை.

    இதையும் படிங்க: ரூ.38.80 லட்சம் பரிசுத்தொகை - அமெரிக்க உச்சரிப்பு போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அமெரிக்க மாணவி

    அதேபோல் ராணியின் இரண்டாம் மகனான இளவரசர் ஆண்ட்ரூவும் கோவிட்-19 பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். எனவே, இவரும் இந்த கொண்டாடட்டத்தில் பங்கேற்க போவதில்லை என அரண்மனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதேவேளை,அரண்மனை வாழக்கையில் இருந்து வெளியேறி இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிக்கும் ராணியின் பேரன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Britain, London, Royal Family

    அடுத்த செய்தி