Home /News /international /

இரண்டாம் எலிசபெத்தின் இறுதி பயணம் தொடங்கியது!

இரண்டாம் எலிசபெத்தின் இறுதி பயணம் தொடங்கியது!

ராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலம்

ராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலம்

இறுதி சடங்கிற்காகவும் ராணியின் உடல் இங்கிலாந்தின் எடின்பர்க் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு, ஹோலிரூட் அரண்மனையின் சிம்மாசன அறையில் வைக்க முடிவு செய்யப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • interna, Indiaenglandenglandenglandengland
    ஸ்காட்லாந்தில் உயிரிழந்த பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலை, இங்கிலாந்திற்கு கொண்டு செல்வதற்கான பயணம் தொடங்கியது.

    உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 8ம் தேதி, வடகிழக்கு ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் இரண்டாம் எலிசபெத் காலமானார். இதனை தொடர்ந்து, பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், இறுதி சடங்கிற்காகவும் ராணியின் உடல் இங்கிலாந்தின் எடின்பர்க் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு, ஹோலிரூட் அரண்மனையின் சிம்மாசன அறையில் வைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, ராணியின் உடல் வைக்கப்பட்ட சவப்பேட்டி காரில் கொண்டு செல்லப்படுகிறது. வழியில் பாலேட்டர் கிராமத்தை அடைந்ததும், ராணியின் உடலுக்கு ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அபெர்டீன் மற்றும் டண்டீ நகரிலும் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. இறுதியாக, 103 மைல் தூரத்தை 6 மணி நேரத்தில் கடந்து, எடின் பர்க் நகரை இரண்டாம் எலிசபெத்தின் உடல் சென்றடைய உள்ளது.

    இதையும் வாசிக்க: பிரிட்டன் ராணி மறைவிற்கு பின் நாட்டிற்கு வரும் பல முக்கிய மாற்றங்கள்
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: England, Queen Elizabeth, Scotland

    அடுத்த செய்தி