Home /News /international /

அழையாத விருந்தாளியைக் கண்டு மகிழ்ந்த ராணி இரண்டாம் எலிசபெத்!

அழையாத விருந்தாளியைக் கண்டு மகிழ்ந்த ராணி இரண்டாம் எலிசபெத்!

ராணி இரண்டாம் எலிசபெத்

ராணி இரண்டாம் எலிசபெத்

Queen Elizabeth: தன்னுடைய செல்ல நாயைக் கண்ட உடனேயே உற்சாகமான ராணி, ‘நீ எங்க இருந்து வந்திருக்க, உனக்கு என்ன வேணும் எனக்குத் தெரியும்’ என்று கொஞ்சியபடி வரவேற்றார்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு வியப்பு தான். அவரைப் பற்றி தெரிந்து கொள்ள இன்னும் ஏராளமான விஷயங்கள் இருக்கிறது. பிப்ரவரி 6 ஆம் தேதி, இங்கிலாந்து ராணி அரியணையில் அமர்ந்து, ஆட்சி செய்யத் தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைகிறது. இவருடைய ஆட்சி, நாட்டை பல்வேறு முறையில் முன்னேற உதவியதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு முறை தத்தளித்த போதும் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்கான உதாரணமாகவும் செயல்பட்டு வருகிறது.

நினைவுகள் எவ்வளவு அழகானவை என்பது அரசிக்கும் பொருந்தும். இரண்டாம் எலிசபெத் ராணி, தனது 70 ஆண்டு கால ஆட்சியை முன்னிட்டு, ஆட்சியை நினைவு கூறும் முக்கிய நினைவுச் சின்னங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு நாய் குறுக்கிட்டது. நினைவுச்சின்னங்களில் கலைப்பொருட்கள், குழந்தைகள் அனுப்பிய அட்டைகள் மற்றும் பொதுமக்கள் அரசியை வாழ்த்திய செய்திகள் ஆகியவை இருந்தன. இவை அனைத்தும் அரசி தன்னுடைய விண்ட்சார் மாளிகையில் உள்ள அறையில் நடந்தது.

அரசியை தொந்தரவு செய்த நாய் அவர் வளர்க்கும் நாய்களில் ஒன்றாகும். அதன் பெயர் கேண்டி. கேண்டி, டாஸ்ஷன்ட் மற்றும் கோர்கி ஆகிய இரண்டின் கலவையாக அறியப்படும் டார்கி என்ற இனத்தைச் சேர்ந்தது. அறையில் நுழைந்த கேண்டி, அமைதியாக அறையில் இருக்கும் பத்திரிக்கையாளர்களை நோட்டமிட்டது.



தன்னுடைய செல்ல நாயைக் கண்ட உடனேயே உற்சாகமான ராணி, ‘நீ எங்க இருந்து வந்திருக்க, உனக்கு என்ன வேண்டும்னு எனக்குத் தெரியும்’ என்று கொஞ்சியபடி வரவேற்றார். இந்த நிகழ்வு இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்தது. இங்கிலாந்து ராணிக்கு செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிரியம் என்பது பலருக்கும் தெரிந்தது தான்.



இரண்டாம் எலிசபெத் மூன்று நாய்களை வளர்த்து வருகிறார். அதில் அவருடைய செல்ல நாய் மற்றும் இருக்கும் நாய்களில் பெரிதானது, கேண்டி. இரண்டாவது நாய் மூயிக் என்ற இளம் வயது நாய் ஆகும். மூன்றவதாக ஒரு கார்கி வகையைச் சேர்ந்த நாய்க்குட்டியை வளர்த்து வந்தார். ஆனால், அந்த குட்டி எதிர்பாரதவிதமாக கடந்த ஆண்டு இறந்ததால், வேறு ஒரு நாய்க்குட்டியை வளர்த்து வருகிறார். அரசி வளர்க்கும் மூன்று நாய்களுமே கார்கி வகையைச் சேர்ந்த நாய்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் :  இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவு!

அரசியின் செல்லமான கேண்டி கடந்த ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் அரசியுடன் உலா வந்தது. அரசி, கடந்த மாதம் உரிய பாதுகாப்புடன், ஆயுதமேந்திய தலைமைப்படை தலைமை அதிகாரியான ஜெனரல் நிக்.கார்ட்டருடன் மக்களை சந்தித்து உரையாடும் நிகழ்ந்தது. அந்த நிகழ்வின் ஒரு புதிய நட்சத்திரமாக ஜொலித்தது, அரசியின் செல்ல நாய் கேண்டி. இங்கிலாந்து ராணியின் 70 ஆண்டு கால ஆட்சி விழா கொண்டாடப் பட இருக்கிறது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Dog Care, Trending, Viral

அடுத்த செய்தி