பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்கி வைக்க ராணி எலிசபெத் ஒப்புதல்... ஐரோப்பிய ஒன்றியத்தில் என்னதான் நடக்கிறது?

Web Desk | news18-tamil
Updated: August 29, 2019, 8:55 PM IST
பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்கி வைக்க ராணி எலிசபெத் ஒப்புதல்... ஐரோப்பிய ஒன்றியத்தில் என்னதான் நடக்கிறது?
ராணி 2-ம் எலிசபெத்
Web Desk | news18-tamil
Updated: August 29, 2019, 8:55 PM IST
பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்கி வைக்க ராணி 2-ம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முயற்சியை எதிர்க்கட்சிகள் தடுப்பதை முறியடிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை பிரிட்டன் அரசு மேற்கொண்டு வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அக்டோபர் 31-ம் தேதிக்குள் ஒப்பந்தம் மேற்கொண்டோ அல்லது ஒப்பந்தம் இல்லாமலோ விலக உள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதற்கு தடையை ஏற்படுத்த தொழிலாளர் கட்சி திட்டமிட்டுள்ளது.


இந்நிலையில், பிரதமரின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றத்தை முடக்கிவைக்க ராணி 2-ம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, நாடாளுமன்ற முடக்கம், செப்டம்பர் 9 முதல் 12-ம் தேதிக்குள் தொடங்கும். அக்டோபர் 14-ம் தேதிவரை நாடாளுமன்றம் முடக்கப்பட்டிருக்கும்.

இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ள போரிஸ் ஜான்சன், நாடாளுமன்றத்தில் அக்டோபர் 14-ம் தேதி ராணி உரையாற்றுவார் என்று தெரிவித்துள்ளார்.

பிரெக்சிட் ஒப்பந்தம் குறித்த வாக்கெடுப்பு, அக்டோபர் 21 அல்லது 22-ம் தேதி நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரெக்ஸிட் எதிர்ப்பாளர்கள், நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Loading...

நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளை எதிர்கொள்ள பிரதமர் தயாராக இல்லை என்று லண்டன் மேயர் சாதிக் கான் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமரின் நடவடிக்கை, ஜனநாயக விரோதமானது என்று நாடாளுமன்ற சபாநாயகரும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற முடக்கத்தை கைவிட வலியுறுத்தி, நாடாளுமன்ற இணையதளத்தில் இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மனு அளித்துள்ளனர்.

இதனிடையே, டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரிட்டன் எதிர்பார்த்ததை போரிஸ் ஜான்சன் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பின் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Also Watch: அறிவியல் போட்டித் தேர்வில் வெற்றிப்பெற்று NASA செல்லும் மதுரை டீக்கடைக்காரரின் மகள்...

First published: August 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...