Home /News /international /

Queen Elizabeth: 25 வயதில் அரியாசனம்.. 15 பிரதமர்களை கண்ட எலிசபெத் 2ம் ராணி

Queen Elizabeth: 25 வயதில் அரியாசனம்.. 15 பிரதமர்களை கண்ட எலிசபெத் 2ம் ராணி

ராணி எலிசபெத்

ராணி எலிசபெத்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பிரிட்டன் மகாராணி எலிசபெத் 2 உடல் நல குறைவு காரணமாக  காலமானார். தனது 25 வயதில் ராணியாக பதவியேற்ற எலிசபெத் ராணி  சுமார் 70 ஆண்டுகாலம் ராணியாக பதவி வகித்துள்ளார்.

    கிங் 6ம் ஜார்ஜ் மற்றும் மகாராணி எலிசபெத் ஆகியோருக்கு கடந்த  21 ஏப்ரல் 1926ம் ஆண்டு மூத்த மகளாக எலிசபெத் 2ம் ராணி பிறந்தார். பிரிட்டனின் மகாராணியாக  தனது 25வது வயதில்  1952ஆம் ஆண்டு பதவியேற்றார். தனது 70 ஆண்டுகளாக ஆட்சியில் இதுவரை 15 பிரிட்டன் பிரதமர்களை அவர் பார்த்துள்ளார். தனது ஆட்சி காலத்தில் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை அவர் எதிர்கொண்டுள்ளார்.

    கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நல குறைவு காரணமாக எலிசபேத் 2ம் ராணி பொது நிகழ்வுகளில் அதிகளவு பங்கேற்காமல் இருந்து வந்துள்ளார். தனது ஆட்சி காலத்தில் பிரிட்டனின் 15 பிரதமர்களை அவர் கண்டுள்ளார்.  இந்நிலையில், ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் தங்கியிருந்த 96 வயதான பிரிட்டன் மகாராணி எலிசபெத்திற்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அனைவரையும் அவசரமாக வரும்படி செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, ர். ராணியின் குடும்பத்தினர் அனைவரும் பால்மாரல் அரண்மனைக்கு விரைந்தனர்.

    இந்நிலையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த ராணி எலிசபெத் காலமானார் என்று பக்கிங்ஹாம் அரண்மணை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எலிசபெத் 2ம் ராணி மறைவை  அடுத்து அவரது மகன் சார்லஸ் மன்னராக பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Queen Elizabeth

    அடுத்த செய்தி