'ராயல்' பெயரை பயன்படுத்த ஹாரிக்கு இங்கிலாந்து ராணி தடை

'ராயல்' பெயரை பயன்படுத்த ஹாரிக்கு இங்கிலாந்து ராணி தடை
'ராயல்' பெயரை பயன்படுத்த ஹாரிக்கு இங்கிலாந்து ராணி தடை
  • News18 Tamil
  • Last Updated: February 20, 2020, 10:08 AM IST
  • Share this:
பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து வெளியேறிய இளவரசர் ஹாரி 'ராயல்' என்னும் பெயரை உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அவர்கள் தொடங்கியுள்ள புதிய நிறுவனத்திற்கு சஸ்ஸக்ஸ் ராயல் என்று பெயரிட்ட ஹாரி தம்பதியினர், அந்த பெயரில் இணையதளம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறியதால் 'ராயல்' என்னும் பெயரை அவர்கள் உபயோகிக்க இங்கிலாந்து ராணி தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தங்களது நிறுவனத்தின் பெயரை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஹாரி தம்பதியினர் தள்ளப்பட்டுள்ளனர்.


First published: February 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்