ஆஸ்திரேலிய ரக்பி அணியை வழிநடத்திய தற்கொலை செய்யப் போவதாக அழுத சிறுவன்! நெகிழ்ச்சி சம்பவம்

ஆஸ்திரேலிய ரக்பி அணியை வழிநடத்திய தற்கொலை செய்யப் போவதாக அழுத சிறுவன்! நெகிழ்ச்சி சம்பவம்
குவாடென்
  • Share this:
தற்கொலை செய்து கொள்ளப்போவதாக 9-வயது சிறுவன் குவாடென் கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ஆஸ்திரேலிய ரக்பி அணி குவாடெனை அழைத்து அணியை வழிநடத்தி செல்லும் சிறப்பு மரியாதையை அளித்துள்ளது. 

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 9 வயது சிறுவன் குவாடென், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கதறி அழுத நிகழ்ச்சி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 9 வயதான அந்தச் சிறுவன் உருவத்தில் மிகவும் குள்ளமாக இருப்பதே அவரது மன உளைச்சலுக்கு காரணமாக அமைந்துள்ளது. தனது உருவத்தை சக மாணவர்கள் கிண்டல் செய்வது அவரது மனதை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள குவாடென் உயரம், தோற்றம் என அனைத்திலும் மாறுபட்டு இருப்பது சக மாணவர்கள் மத்தியில் அவரை பற்றி கேலியாக பேசப்பட்டது.

மனதளவில் பெரும் வேதனையை அனுபவித்து வந்த சிறுவன் குவாடென் தற்கொலை செய்து கொள்வது குறித்து பேசி கதறி அழும் வீடியோ ஒன்றை அவரது தாய் Yarraka சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அதில், தனது மகன் மிகவும் மனவருத்தத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், தயவு செய்து பெற்றோர்கள் அவரவர் குழந்தைகளுக்கு சக மாணவர்களை கேலி, கிண்டல் செய்யாமல் இருக்கும்படி சொல்லிக் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையாக பதிவிட்டிருந்தார்.


இந்த தாயின் உருக்கமான கோரிக்கை உலகெங்கும் உள்ள மனிதர்களை, மிகவும் கவனிக்க வைத்ததுடன், வருந்தவும் வைத்தது. இந்நிலையில், சிறுவன் குவாடெனுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதமாக ஆஸ்திரேலிய ரக்பி அணி நெகிழ்ச்சி சம்பவம் ஒன்றை அரங்கேற்றியது. குயின்ஸ்லேண்டில் நட்சத்திர வீரர்கள் விளையாடும் ரக்பி போட்டியில் Indigenous ஆல் ஸ்டார் அணியின் வீரர்களை வழிநடத்தும் மிகச்சிறந்த கவுரவத்தை அந்த அணி நிர்வாகம் குவாடனுக்கு அளித்திருந்தது.

மைதானம் முழுவதும் நிறைந்திருந்த ரசிகர் பட்டாளத்தின் உற்சாகமான கூச்சல்களுக்கு இடையே ஒரு கையில் ரக்பி பந்துடனும், மற்றொரு கையில் கேப்டன் Joel Thompson விரல்களை பிடித்துக்கொண்டும் குவாடென் மைதானத்துக்குள் சென்றார்.

இந்த நெகிழ்ச்சி சம்பவத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குவாடனின் தாயார் யாரகா, குவாடனுக்கு வாழ்க்கையின் மிகவும் மோசமான நாட்களில் இருந்து, மிகவும் சிறந்த நாளாக இந்த நாள் அமைந்ததாக தாய்மையின் உருக்கத்தில் உணர்வுப்பூர்வமாக பகிர்ந்து கொண்டார்.Also see:

First published: February 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading