ஹோம் /நியூஸ் /உலகம் /

உலகின் சிறந்த விமான நிறுவனங்கள்.. 7-வது ஆண்டாக மாஸ் காட்டும் கத்தார் ஏர்வேஸ்

உலகின் சிறந்த விமான நிறுவனங்கள்.. 7-வது ஆண்டாக மாஸ் காட்டும் கத்தார் ஏர்வேஸ்

கத்தார் விமானம்

கத்தார் விமானம்

உலகின் மிகச்சிறந்த விமான சேவை நிறுவனமாக கத்தார் ஏர்வேஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaQatar

  உலகளவிலான விமான போக்குவரத்தில் 2022ம் ஆண்டிற்கான சிறந்த விமான சேவைக்கான ஸ்கை டிரக்ஸ் வேர்ல்ட் ஏர்லைன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விமான சேவையின் தரம், சேவை, நிலைத்தன்மை, புதிய வசதிகள், பயணிகளின் வசதி, பணியாளர்கள் சேவை, பாதுகாப்பு உள்ளிட்ட பலவற்றின் அடிப்படையில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதில் 7வது ஆண்டாக தொடர்ந்து கத்தார் ஏர்வேஸ் முதல் இடத்தை பிடித்துள்ளது. கத்தார் நாட்டு அரசு அளித்து வரும் கத்தார் ஏர்வேஸ், கொரோனா காலத்திலும் தனது சேவையை தொடர்ந்து வந்தது. கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்தப்போதும், கத்தார் ஏர்வேஸ், 30 இடங்களுக்கு அன்றாடம் விமான சேவையை அளித்தது.

  இரண்டாவது இடத்தை சிங்கப்பூர் நாட்டின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பிடித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மூன்றாவது இடத்தையும், ஜப்பானின் ஆல் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனம் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன. ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ், ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு 6-வது இடத்தில் இருந்த ஹாங்காங்கின், கேத்தே பசிபிக், ஏராளமான விமான சேவைகளை ரத்து செய்ததால் 16-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த இடத்தை ஜப்பான் ஏர்லைன்ஸ் பிடித்துள்ளது.

  துருக்கியின் துர்க் ஹவா யோலறி, ஏர் பிரான்ஸ், கொரிய ஏர்லைன்ஸ், ஸ்விஸ் சர்வதேச ஏர்லைன்ஸ் ஆகியவை முறையே 7, 8, 9 மற்றும் பத்தாவது இடத்தை பிடித்துள்ளன.விமான சேவை நிறுவனங்களின் ஒவ்வொரு கேபின் வகுப்பிற்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. . சிறந்த முதல் வகுப்பு கேபின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்-சுக்கு சென்றது, கத்தார் நிறுவனம் சிறந்த பிஸ்னஸ் கிளாஸ்-சை விருதை தட்டிச் சென்றது.

  விர்ஜின் அட்லாண்டிக் ஏர்வேஸ் லிமிடெட் பிரீமியம் எகானமிக்காகவும், எமிரேட்ஸ் சிறந்த எகானமி கேபினுக்காகவும் விருதுகளை வென்றன.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Tamil News