ஹோம் /நியூஸ் /உலகம் /

FIFA World Cup : எதிரணியினருக்கு லஞ்சம் கொடுத்து கோப்பையை வெல்ல கத்தார் திட்டம்? வெளியான பரபரப்பு குற்றச்சாட்டு

FIFA World Cup : எதிரணியினருக்கு லஞ்சம் கொடுத்து கோப்பையை வெல்ல கத்தார் திட்டம்? வெளியான பரபரப்பு குற்றச்சாட்டு

மாதிரி படம்

மாதிரி படம்

கால்பந்து உலக கோப்பையை நடத்தி அதில் வெற்றி பெற்று பெருமை சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் கத்தார் நாடு திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளன

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கத்தாரில் இன்று தொடங்க உள்ள பிபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் முதல் போட்டியில் கத்தார் வெற்றி பெற ஈக்வடார் நாட்டு வீரர்களுக்கு லஞ்சம் கொடுத்துள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இன்று தொடங்குகிறது. இந்த கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன்களான பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 அணிகள் பங்கேற்கின்றன. 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ள இந்த தொடரில் முதல் போட்டியில் கத்தார்- ஈகுவடார் அணிகள் இன்று மோதுகின்றன.

  இந்த நிலையில் வெளிநாட்டு ரசிகர்கள் அதிகளவில் வருகை தந்துள்ளதால் அங்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் பீர் அருந்துவதற்கு தடை போட்டியை காண வரும் பெண்களுக்கு ஆடை கட்டுபாடு என கடும் நிபந்தனைகளை கத்தார் அரசு விதித்துள்ளது. இந்நிலையில் உலக கோப்பை நடத்தும் கத்தார் நாடு கோப்பை வெல்ல லஞ்சம் கொடுத்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

  இதையும் படிங்க: கத்தார் கால்பந்து உலக கோப்பையில் வழங்கப்படும் பரிசு தொகை எவ்வளவு தெரியுமா? தொகையை கேட்டு வாய் பிளக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்?

  இன்று உலக கோப்பை தொடங்கவுள்ள நிலையில் கத்தார் நாடு மீது  மேலும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதல் போட்டியில் கத்தார் அணியிடம் ஈகுவடார் அணி தோல்வி பெற 7.4 மில்லியன் டாலர்களை கத்தார் நாடு லஞ்சமாக கொடுத்துள்ளதாக மூலோபாய அரசியல் விவகாரங்களில் நிபுணரும், சவுதி அரேபியாவில் உள்ள பிரிட்டிஷ் மையத்தின் பிராந்திய இயக்குநருமான அம்ஜத் தாஹா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் டிவிட்டர் பக்கத்தில் முன் வைத்துள்ளார்.

  கால்பந்து உலக கோப்பையை நடத்தி அதில் வெற்றி பெற்று பெருமை சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் செல்வமிக்க கத்தார் நாடு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: FIFA 2022, FIFA World Cup 2022, Qatar