ஹோம் /நியூஸ் /உலகம் /

ஒரு பாம்பை விழுங்கும் மற்றொரு பாம்பு - பதறவைக்கும் பகீர் வீடியோ

ஒரு பாம்பை விழுங்கும் மற்றொரு பாம்பு - பதறவைக்கும் பகீர் வீடியோ

மலைப்பாம்பு

மலைப்பாம்பு

ஒரு மலைப்பாம்பை மற்றொரு மலைப்பாம்பு விழுங்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

வழக்கமான பாம்புகளை விட மலைப்பாம்புகளின் குணங்கள் வித்தியாசப்படும். வழக்கமான பாம்புகள் இரையை விஷம் செலுத்தி கொன்று சாப்பிடும் நிலையில், மலைப்பாம்புகள் இரையை அப்படியே விழுங்கி சாப்பிடும் வழக்கத்தை வைத்துள்ளன. முதலில் எலி உள்ளிட்ட சிறிய இரைகளை உண்ணும் மலைப்பாம்புகள் வளர வளர மான், மாடு, முதலை, ஆடு என மிகப்பெரிய விலங்குகளை கொன்று அப்படியே விழுங்கி விடுகின்றன.

சமீபத்தில் மனிதர்களை கொன்று விழுங்கிய மலைப்பாம்புகள் குறித்த செய்திகளையும் பார்த்திருப்போம். ஆனால், ஒரு உயிரினம் தனது சக உயிரினத்தை விழுங்கியதை பார்த்ததுண்டா என்றால் இல்லை என்றே சொல்வோம். ஆனால், ஒரு மலைப்பாம்பு மற்றொரு மலைப்பாம்பை விழுங்கி அதனை பொய் என நிரூபித்துள்ளது.

ஒரு வீடியோவில் இரண்டு மலைப்பாம்புகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொள்கின்றன. அதில், கடும் கோபமடைந்த மலைப்பாம்பு, மற்றொரு மலைப்பாம்பை வாயில் கவ்வி விழுங்க ஆரம்பிக்கிறது. தன்னை விடுவித்துக்கொள்ள எவ்வளவோ போராடுகிறது விழுங்கப்பட்ட மலைப்பாம்பு. ஆனாலும், அதன் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
 
View this post on Instagram

 

A post shared by 🐍SNAKE WORLD🐍 (@snake._.world)இந்த வீடியோ பாம்பு உலகம் snake._.world என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதனைப் பார்த்ததும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என அதில் கேட்கப்பட்டிருந்தது. அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இணையவாசிகள் பலவாறாக கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

First published:

Tags: Python, Snake, Viral Video