Home /News /international /

ரஷ்யாவுக்கு ஜோ பைடன் பகிரங்க எச்சரிக்கை.. கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல்

ரஷ்யாவுக்கு ஜோ பைடன் பகிரங்க எச்சரிக்கை.. கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல்

Joe Biden

Joe Biden

Joe Biden: அமெரிக்காவின் நேச நாடுகள் துணையோடு ரஷ்யா இதுவரை சந்திக்காத விளைவுகளை சந்திக்கும் - ஜோ பைடன்

    உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ரஷியாவுக்கும் உக்ரைன் நாட்டுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. 2014 ஆம் ஆண்டின் முற்பகுதியில் உக்ரேனியர்கள் தங்கள் ரஷ்ய சார்பு ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்தபோது, ​​ரஷ்யா, உக்ரைனின் தெற்கு கிரிமியா தீபகற்பத்தை கிளர்ச்சியாளர்களின் துணையுடன் கைப்பற்றி தங்கள் நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. இதனையடுத்து கடந்த சில மாதங்களாக உக்ரனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.

    ரஷ்ய படைகள்


    ரஷ்யாவை ஒட்டிய எல்லையிலும், உக்ரைனையை ஒட்டிய ரஷ்யாவின் ஆதரவு நாடான பெலாரஸ் எல்லைகளிலும் ரஷ்யா பெரும் அளவிலான படைத்துருப்புகளை குவித்து வருகிறது. சுமார் ஒரு லட்சம் ராணுவ வீரர்களையும், தளவாடங்களையும் ரஷ்யா குவித்திருப்பதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கலாம் எனவும் தெரியவருகிறது.

    Also read:  சீன ராணுவத்தால் அருணாச்சல பிரதேச சிறுவன் கடத்தல்

    இதனிடையே உக்ரைன் மீது ரஷ்யா விரைவில் படையெடுக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் உக்ரைன் அருகே குவிக்கப்பட்டுள்ள படைகளை பின்வாங்குமாறும் அமெரிக்க விடுத்த கோரிக்கை ரஷ்யாவால் நிராகரிக்கப்பட்டது.

    இதனிடையே உக்ரைன் - ரஷ்யா விவகாரம் தொடர்பாக வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியபோது, உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.

    Also read:  மகளிடம் பேசிய திருமணமான இளைஞரை கொலை செய்த பக்கத்து வீட்டு குடும்பத்தினர்

    விளாடிமிர் புதின் ஒரு முழுமையான அணு ஆயுதப் போருக்குக் குறைந்த தூரத்தில் ரஷ்யா இருக்கிறது என்பதை புரிந்துகொள்வார் என்று நான் நம்புகிறேன், அவர் உலகில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு நல்ல நிலையில் இல்லை. மேற்குலகை புதின் சோதித்து பார்ப்பார் என உறுதியாக தெரியாது ஆனால் அவர் அப்படி செய்வார் என நான் நம்புகிறேன். ஒருவேளை அப்படி சோதித்தால், அமெரிக்காவின் நேச நாடுகள் துணையோடு ரஷ்யா இதுவரை சந்திக்காத விளைவுகளை சந்திக்கும். இதுவரை பார்த்திராத பொருளாதார தடைகளையும் சந்திக்கும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ரஷ்யா - உக்ரைன் எல்லை விவகாரம் மோசமடைந்துள்ள நிலையில் அமெரிக்காவின் எச்சரிக்கை பதற்றமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.
    Published by:Arun
    First published:

    Tags: America, Russia

    அடுத்த செய்தி