Home /News /international /

'போர்க் குற்ற விசாரணையை புதின் எதிர்கொள்ள வேண்டும்' : அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

'போர்க் குற்ற விசாரணையை புதின் எதிர்கொள்ள வேண்டும்' : அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

குற்றம் சுமத்துவதில் உலக நாடுகள் அவசரம் காட்ட வேண்டாம். எங்கள் தரப்பு வாதங்களையும் கேட்டபின்னர் முடிவு செய்யுங்கள் - ரஷ்யா

போர்க்குற்ற விசாரணையை ரஷ்யா எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
உக்ரைனில் என்ன நடக்கிறது என்பது உலக நாடுகளுக்கு தெரியும். புதின் மிக கொடூரமான மனிதர். போர்க்குற்றத்தை அவர் உக்ரைனில் செய்து வருகிறார். இதற்காக அவர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் தலைநகரை கீவ்வின் சில பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றிய நிலையில் அவற்றை உக்ரைன் ராணுவம் போராடி மீட்டது. அப்போது, புச்சா என்ற இடத்தில் பொதுமக்களின் சடலங்கள் கை கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையிலும், கைகள் கட்டப்பட்டு நெற்றியில் சுடப்பட்ட நிலையிலும் கிடந்தன. இதற்கு ரஷ்ய படைகளே காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் வரலாறு..!

இதற்கு பதில் அளித்துள்ள ரஷ்ய ராணுவம் அவை அனைத்தும் போலியாக உருவாக்கப்பட்டவை என்று கூறியுள்ளது. இதுகுறித்து ரஷ்ய அரசின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ கூறுகையில், 'ரஷ்ய வீரர்கள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படுகிறது. இதற்கு ஆதாரமாக காட்டப்படும் வீடியோக்களை எங்களது வல்லுனர்கள் ஆய்வு செய்தனர். இதில் அவை போலி என்று தெரியவந்துள்ளது.

ரஷ்யா மீது குற்றம் சுமத்துவதில் உலக நாடுகள் அவசரம் காட்ட வேண்டாம். எங்கள் தரப்பு வாதங்களையும் கேட்டபின்னர் முடிவு செய்யுங்கள்' என்று தெரிவித்தார்.ரஷ்யா படைகள் விரட்டப்பட்ட பின்னர் 410 பொதுமக்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க - Global Warming- கிழக்கு அண்டார்ட்டிகாவின் 1,200 சதுர கிமீ பனிப்பாறைகள் முற்றிலும் சரிந்தது

இதற்கிடையே தொடர் போர் காரணமாக உக்ரைனை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று ஐநா தகவல் தெரிவித்துள்ளது. தற்போது வரை 42 லட்சம்பேர் உக்ரைனை விட்டு அகதிகளாக வெளியேறியுள்ளனர் என்றும் அவர்களது நிலைமை மிக மோசமாக உள்ளது என்றும் ஐநா வேதனை வெளியிட்டுள்ளது.

 
Published by:Musthak
First published:

Tags: Russia - Ukraine

அடுத்த செய்தி