கொரோனா அச்சுறுத்தல்: தனிமைப்படுத்திக் கொண்ட புதின்!

விளாடிமிர் புதின்

கடைசியாக கடந்த திங்களன்று புதின் பொதுவெளியில் தோன்றினார். பாராலிம்பிக் போட்டியில் தங்கள் வென்றவர்களுடன் அவர் உரையாடினார்.

  • Share this:
    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, புதின் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டதாக அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

    உலகளவில் கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக ரஷ்யா உள்ளது. அந்நாட்டில் தொற்று பரவல் குறைந்து காணப்பட்ட நிலையில், மீண்டும் அதிகரித்துள்ளது.  அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்துள்ளது.  இறப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி உள்ளது.

    தினசரி பாதிப்பு சராசரியாக 17 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் ஊழியர்களில் ஒருவருக்கு  கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அதிபர் விளாடிமிர் புதின் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் பாதிப்பு இல்லை என்று தெரியவந்ததாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மற்றும் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக புதின்  தஜிகிஸ்தான் செல்ல திட்டமிட்டிருந்தார். தற்போது, தஜிகிஸ்தான் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  கடைசியாக கடந்த திங்களன்று பொதுவெளியில் புதின் தோன்றினார்.

    இதையும் படிங்க: ஆப்கன் நலனுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டோம் - பாகிஸ்தானின் அறிவிப்புக்கு தாலிபான்கள் பதிலடி


    பாராலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்றவர்களுடன் கலந்துரையாடிய அவர், எனக்கு நெருக்கமானவர்கள்  நிறையப் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, என்னை தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன் என  கூறியிருந்தார்.

    மேலும் படிக்க: இரட்டை கோபுர தாக்குதலில் சவுதி அரேபியா தொடர்பு? 20 ஆண்டு கழித்து ஆதாரத்தை வெளியிட்ட அமெரிக்கா!


    ரஷ்ய அதிபர் புதின் பிறருடன் கலந்துரையாடுவது, பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற புகைப்படங்கள் அவ்வபோது வெளியிடப்படும். கடந்த மார்ச் மாதத்தில் ரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை செலுத்திக்கொண்டதாக புதின் அறிவித்தார். எனினும் இது தொடர்பாக எவ்வித புகைப்படமும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Murugesh M
    First published: