ரஷ்யாவை ஒட்டிய நாடான உக்ரைனின் மீது கடந்த சில தினங்களுக்கு முன்னர் போர் தொடுத்தது ரஷ்யா. ரஷ்யாவின் பெரும்படைக்கு எதிராக சிறிய நாடான உக்ரைனும் தொடர்ந்து போரிட்டுவருகிறது. ரஷ்யாவின் படைகளை சமாளிக்க உலக நாடுகள் உதவி செய்யவேண்டும் என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தொடர்ந்து கோரிக்கைவைத்துவருகிறது. இருப்பினும், எந்த உலக நாடும் ராணுவ உதவி அளிப்பதற்கு தயாராக இல்லை. மாறாக ரஷ்யாவுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றன.
மேலும், ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத்தடைகளை விதித்துவருகின்றன. ரஷ்யாவின் மீது பல்வேறு பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், போர் நடவடிக்கையிலிருந்து ரஷ்யா சிறிதும் பின்வாங்கவில்லை. குறிப்பாக போர் நடவடிக்கையை தீவிரப்படுத்திவருகிறது.
உக்ரைனின் 975 ராணுவத்தளங்களை அழித்துள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் 471 உக்ரைன் ராணுவத்தினரை கைது செய்துள்ளதாக ரஷ்ய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.
இந்தநிலையில், ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர், ராணுவத் தளபதி மற்றும் உயர் அதிகாரிகளுடன் புதின் ஆலோசனையில் ஈடுபட்டார். அந்த சந்திப்பின்போது, ‘அணு ஆயுத தடுப்பு படையை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று புதின் அறிவுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நேடோவைச் சார்ந்த நாடுகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து புதின் இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
உக்ரைனில் இருக்கும் இந்தியர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டது இந்திய தூதரகம்
போர் தொடர்பாக தொலைக்காட்சியில் பேசிய புதின், ‘மேற்குலக நாடுகள் எங்கள் நாட்டின் மீது பொருளாதார ரீதியாக மட்டும் எதிரான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மாறாக, நேட்டோ நாடுகளின் தலைவர்கள் எங்கள் நாட்டுக்கு எதிரான கடும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.