ரஷ்ய அதிபர் புதின் ஒரு கொலைகாரர்; அமெரிக்க தேர்தலில் தலையிட்டதற்கு தக்க விலை கொடுப்பார்: ஜோ பைடன் சாடல்

ஜோ பைடன்

பைடன் மீது தவறான, நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களை, டிரம்ப் ஆதரவாளர்கள் மூலம் பரப்ப புதினும் அவரது நிர்வாகமும் முயன்றுள்ளது. குறிப்பாக டிரம்பின் தனிப்பட்ட வழக்கறிஞரான ரூடி ஜியுலானிக்கு அதில் முக்கிய பங்கு இருந்தது.

 • Share this:
  அமெரிக்க தேர்தலில் தலையிட்டவர் என்றும் தன்னை தோற்கடிக்க முயற்சி செய்தார் என்றும், கொலைகாரர் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் புதின் மீது கடும் சாடல் மழை பொழிந்துள்ளார்.

  அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய அதிபர் தலையிடுவதாக ட்ரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தலிலேயே கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன ஹிலாரி கிளிண்டனில் மின்னஞ்சல்களை எல்லாம் ஹேக் செய்து அவருக்கு எதிராக வேலை செய்ததாக கடும்குற்றச்சாட்டுகள் ரஷ்யா மீது எழுந்தது, இது தொடர்பான விசாரணையில் டிரம்ப் எப்படியோ தப்பினார்.

  இந்நிலையில் ஜோ பைடனையும் தோற்கடிக்க புதின் முயற்சித்தார் என்று அமெரிக்க உளவுத்துறை பரபரப்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

  அதில், அதிகாரிகள் மற்றும் டிரம்பிற்கு நெருக்கமான மற்றவர்கள் மூலம் பிரசாரத்தில் பைடன் குறித்து தவறான தகவல்களை ரஷியா புகுத்த முயன்றது.

  பைடன் மீது தவறான, நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களை, டிரம்ப் ஆதரவாளர்கள் மூலம் பரப்ப புதினும் அவரது நிர்வாகமும் முயன்றுள்ளது. குறிப்பாக டிரம்பின் தனிப்பட்ட வழக்கறிஞரான ரூடி ஜியுலானிக்கு அதில் முக்கிய பங்கு இருந்தது.

  உக்ரைன் நிறுவனத்துடன் வர்த்தக உறவு வைத்துள்ள பைடனின் மகன் ஹன்டர் பைடன் மீது உள்ள நிரூபிக்கப்படாத மோசடி வழக்கில், பைடனையும் சேர்க்க , டிரம்ப் ஆதரவாளர்கள் ரஷிய அரசின் உதவியுடன் திட்டமிட்டனர்.

  அமெரிக்காவிற்குள் குழப்பத்தையும் முரண்பாடுகளையும் உருவாக்குவதற்கான ரஷியாவின் முயற்சிகள் இது ஆகும்.

  ஈரானும் தேர்தலில் தலையிட முயன்றதாக அறிக்கை கண்டறிந்துள்ளது, ஆனால் எந்தவொரு வெளிநாட்டு சக்தியும் - ரஷியா கூட - வாக்கு மொத்தத்தை மாற்றவோ அல்லது தேர்தல் உள்கட்டமைப்பைத் தாக்கவோ முயலவில்லை என அதில் கூறப்பட்டு உள்ளது.

  இந்நிலையில் ஜோ பைடன் இது தொடர்பாகக் கூறும்போது, “புதின் இதற்கான விலையைக் கொடுப்பார்” என்றார். எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸீ நவால்னியை விஷம் வைத்து கொல்லப்பார்த்தார் புதின் என்ற கேள்விக்கு, ‘நானும் அப்படித்தான் அவரை அழைப்பேன்’ என்றார்.

  டிரம்புக்கு ஆதரவாக பைடனுக்கு எதிராக புதின் அமெரிக்க தேர்தலில் தலையிட்டு செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

  இதனையடுத்து, அமெரிக்காவுக்கான தனது தூதர் அனடோலி ஆன்டனோவை மாஸ்கோ திரும்புமாறு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
  Published by:Muthukumar
  First published: