Home /News /international /

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 17 நாடுகள் ரஷ்யாவின் நட்புப் பட்டியலில் இருந்து நீக்கம்: புடின் அதிரடி

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 17 நாடுகள் ரஷ்யாவின் நட்புப் பட்டியலில் இருந்து நீக்கம்: புடின் அதிரடி

விளாடிமிர் புடின்

விளாடிமிர் புடின்

Russia unfriendly countries: ரஷ்யா மீது விதிக்கப்படும் பொருளாதார தடைகள் போருக்கு சமமானது என்று புடின் விமர்சித்திருந்தார். இந்நிலையில், ரஷ்யாவின் நட்பில் இல்லாத நாடுகளின் (Unfriendly countries) பட்டியல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிபர் புடின் ஒப்புதல் அளித்தார்.

மேலும் படிக்கவும் ...
    உக்ரைன் விவகாரத்தில் பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதித்துவரும் சூழலில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 17 நாடுகளை ரஷ்யாவின் நட்பு பட்டியலில் இருந்து நீக்கி புடின் உத்தரவிட்டுள்ளார்.

    அமைதி நடவடிக்கை எனக் கூறி உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் 13வது நாளை எட்டியுள்ளது. இதுவரை 2 முறை அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றும் முடிவு எட்டப்படவில்லை. இதனிடையே உக்ரைன் சரண் அடையும்வரை போரை நிறுத்தப் போவதில்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், அந்நாட்டின் மீது மேற்கத்திய நாடுகள் அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பொருளாதாரத் தடைகளால், ரஷ்யாவின் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரஷ்யாவின் பங்குச்சந்தைகள் ஐம்பது சதவீதம் சரிவைச் சந்தித்தது. ரஷ்யாவின் நாணயமான ரூபிளும் வரலாறு காணாத அளவுக்கு மதிப்பை இழந்துள்ளது.

    ரஷ்யா மீது விதிக்கப்படும் பொருளாதார தடைகள் போருக்கு சமமானது என்று புடின் விமர்சித்திருந்தார். இந்நிலையில், ரஷ்யாவின் நட்பில் இல்லாத நாடுகளின் (Unfriendly countries) பட்டியல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிபர் புடின் ஒப்புதல் அளித்தார்.

    இதையும் படிங்க: போரால் மக்கள் அகதிகளாக வெளியேறும்போது பியானோ வாசித்து ஆறுதல் அளித்த பெண் - நெகிழ்ச்சி வீடியோ


    அதன்படி, அமெரிக்கா மற்றும் கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இங்கிலாந்து (ஜெர்சி, அங்குவிலா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், ஜிப்ரால்டர் உட்பட), உக்ரைன், மாண்டினீக்ரோ, சுவிட்சர்லாந்து, அல்பேனியா, அன்டோரா, ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், மொனாக்கோ, நார்வே, சான் மரினோ, வடக்கு மாசிடோனியா மேலும் ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, மைக்ரோனேஷியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் தைவான் ஆகிய 17 நாடுகள் நட்பு அள்ளாத நாடுகள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Russia - Ukraine, USA, Vladimir Putin

    அடுத்த செய்தி