பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பெண் ஒருவருடன் தொலைபேசியில் ஆபாசமாக பேசிய ஆடியோ வைரலானதை அடுத்து, புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபரில், இம்ரான் கான் சட்டம் இயற்றுபவர்களின் நம்பிக்கையை விலைக்கு வாங்க முயன்றதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று வெளிவந்தது. மேலும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அவர் வெளியேற்றப்படுவதற்கு முன்பு தனது விளக்கத்தை அளித்தார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆட்சியில் இருந்து இம்ரான் கான் வெளியேற்றப்பட்டதில் இருந்து, அவருக்கு எதிராக வெளியாகும் ஆவணங்களின் வரிசையில் தற்போது வைரலாகியுள்ள இந்த ஆடியோ கிளிப்பும் சேர்ந்துள்ளது.
இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்த ஆடியோ கிளிப்பை பாகிஸ்தான் பத்திரிகையாளர் சையத் அலி ஹைதர் தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். ஆடியோ கிளிப்பில், இம்ரான் கான் என்று கூறப்படும் ஒரு ஆண், ஒரு பெண்ணிடம் ஆபாசமான மொழியில் பேசுவது இருந்தது.
இதையும் படிங்க : ஆப்கானிஸ்தானில் பெண்கள் உயர்கல்வி பெறுவதற்கு தடை - அதிரடி உத்தரவால் ஷாக் கொடுத்த தாலிபான்!
தற்போதைய கூட்டணி அரசாங்கமும், ராணுவ அமைப்பும் இணைந்து இம்ரான் கானுக்கு எதிராக இந்த பொய் குற்றங்களை சுமத்துவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கசிந்த ஆடியோ பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்ததாக சில பாகிஸ்தான் செய்தி இணையதளங்கள் கூறின. ஆடியோவின் நம்பகத்தன்மை இன்னும் கேள்விக்குறியாக உள்ள நிலையில், சில பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் ஆடியோவில் உள்ள குரல் உண்மையில் இம்ரான் கானுடையது என்று கூறினர்.
"கான் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால் அவர் தன்னை ஒரு முன்மாதிரி முஸ்லீம் தலைவராக காட்டுவதை நிறுத்துவார் என்று நான் நம்புகிறேன்" என்று பத்திரிகையாளர் ஹம்சா அசார் சலாம் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
Khan sb can do whatever he wants in his personal life but I hope he will stop presenting himself as some kind of role model Muslim leader for the entire Ummah.
— Hamza Azhar Salam (@HamzaAzhrSalam) December 20, 2022
ஃபேஸ்புக் வீடியோவில், பத்திரிகையாளர் மன்சூர் அலி கான் , கசிந்த ஆடியோவில் உள்ள பெண்ணைப் பற்றி தனக்குத் தெரியும் என்று கூறினார், அதே நேரத்தில் அவரது பெயரைக் குறிப்பிடவில்லை என்று டெய்லி பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இம்ரான் கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ), இந்த ஆடியோ கிளிப் "போலி" என்று கூறியுள்ளது.பி.டி.ஐ தலைவர் டாக்டர் அர்ஸ்லான் காலிட், "பிடிஐ தலைவரின் அரசியல் எதிரிகள் போலி ஆடியோக்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவதைத் தாண்டி சிந்திக்க முடியாது” என்று விமர்சித்துள்ளார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Controversial speech, Imran khan, Pakistan News in Tamil