நேபாளத்தில் பப்ஜி கேமிற்குத் தடை: பெற்றோர்களின் தொடர் புகார்களால் அதிரடி நடவடிக்கை

இளைஞர்களை பெரும் அடிக்‌ஷனிற்கு உள்ளாக்கியிருக்கும் இந்த கேம் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது என பெற்றோர்கள் புகார்

Web Desk | news18
Updated: April 12, 2019, 6:47 PM IST
நேபாளத்தில் பப்ஜி கேமிற்குத் தடை: பெற்றோர்களின் தொடர் புகார்களால் அதிரடி நடவடிக்கை
பப்ஜி கேமிற்குத் தடை
Web Desk | news18
Updated: April 12, 2019, 6:47 PM IST
பெற்றோர்களின் தொடர் புகார்களால் நேபாளத்தில் பப்ஜி கேம் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேபாள தொலைத்தொடர்பு நிறுவனம் இந்த அதிரடி உத்தரவை நேற்று முதல் அமலுக்குக் கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில் பப்ஜி குறித்த சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் இந்த பப்ஜி கேம் குஜராத்தில்  தடை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு பப்ஜி கேம் விளையாடியவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். பப்ஜி மொபைல் குழு பிரச்னைகளை அலசி தங்களுடைய பயனாளர்களின் நலன் கருதி பல அம்சங்களைக் கொண்டு வந்தது.

இந்நிலையில், நேபாள நாட்டில் பப்ஜி கேமைத் தடை செய்திருப்பது பெற்றோர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.


தங்கள் நெட்வொர்க்கில் விளையாட்டைத் தடை செய்ய அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள், இணையச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் நேபாள தொலைத்தொடர்பு நிறுவனம் (NTA) ஒரு உத்தரவு வழங்கியுள்ளது. நாட்டில் உள்ள நுகர்வோர்கள் விரும்புவதால் நேபாள் முழுவதும் உள்ள நெட்வொர்க்கில் பப்ஜி கேம் ஆன்லைனில் விளையாடுவதைத் தடை செய்ய வேண்டும் என அந்த உத்தரவில் கூறியுள்ளது.

”பெற்றோர்களின் தொடர் புகார்களைக் கருத்தில் கொண்டு பப்ஜி கேம் தடை செய்யப்பட்டுள்ளது. இளைஞர்களை பெரும் அடிக்‌ஷனிற்கு உள்ளாக்கியிருக்கும் இந்த கேம் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்ததால் அவர்களின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு தடை செய்துள்ளோம். அனைத்து இணையதள சேவை நிறுவனங்களுக்கும் அதன் ஸ்ட்ரீமிங்கை தடை செய்ய வேண்டும் என அறிக்கை விடுத்தோம். அதை நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டதுடன் நேற்று முதல் (வியாழன்) தடை அமலுக்கு வந்துள்ளது” என நேபாள தொலைத்தொடர்புத் துறை அதிகாரி சந்திப் அதிகரி ராய்டர்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Also WATCH : நான் உங்கள் வீட்டு பிள்ளை - கிருஷ்ணகிரி பிரசாரத்தில் ராகுல்காந்தி பேச்சு

Loading...

First published: April 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...