சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஆஸ்திரேலியாவில் மாபெரும் போராட்டம்

சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஆஸ்திரேலியாவில் மாபெரும் போராட்டம்
  • News18 Tamil
  • Last Updated: September 20, 2019, 10:51 PM IST
  • Share this:
சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மாபெரும் போராட்டத்தால் சிட்னி நகரமே ஸ்தம்பித்தது.

காடுகள் அழிப்பு, இயற்கை வளங்கள் சுரண்டல் போன்ற காரணத்தால் உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாக்க ஐ.நா. உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு நாடுகளில் போராட்டம் நடைபெற்றது.

உலக அளவில் இளைஞர்கள் அழைப்பு விடுத்திருந்த இந்த போராட்டத்தின் இதன் ஒருபகுதியாக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டனர். மேலும், 2030-க்குள் கார்பன் வெளியேற்ற அளவை பூஜ்ஜியமாக குறைக்க நடவடிக்கை எடுக்க கோரி 110 நகரங்களில் போராட்டம் நடைபெற்றது.


First published: September 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்