ஹோம் /நியூஸ் /உலகம் /

இலங்கை அதிபர் மாளிகையில் புகுந்த போராட்டக்காரர்கள் நீச்சல் குளத்தில் குதூகலம்..

இலங்கை அதிபர் மாளிகையில் புகுந்த போராட்டக்காரர்கள் நீச்சல் குளத்தில் குதூகலம்..

இலங்கை அதிபர் மாளிகையில் புகுந்த போராட்டக்காரர்கள் நீச்சல் குளத்தில்

இலங்கை அதிபர் மாளிகையில் புகுந்த போராட்டக்காரர்கள் நீச்சல் குளத்தில்

கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசுக் கப்பலொன்றில், அவசர அவசரமாக கோத்தபய ராஜபட்சவின் உடமைகள் ஏற்றப்படும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி வெடித்திருக்கும் நிலையில், அதிபர் மாளிகையிலிருந்து வெளியேறிய கோத்தபய, வெளிநாட்டுக்குச் தப்பிச்சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் பெருமளவில் வெடித்தது. மக்களின் கடும் போராட்டத்தின் காரணமாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச பதவி விலகினார். இதையடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டார். புதிய பிரதமர் நியமிக்கப்பட்ட பிறகும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி சரியாகாத நிலையில், இலங்கை அதிபருக்கு எதிராக இன்று மக்கள் புரட்சி வெடித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நிலையை சீர் செய்யாததால், அதிபர் கோத்தபய ராஜபட்ச, பதவியிலிருந்து விலகக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிபர் மாளிகையிலிருந்து கோத்தபய ராஜபக்ச பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து, அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஏராளமான சொகுசுக் கார்களைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து, அதிபர் மாளிகையில் இருக்கும் நீச்சல் குளங்களில், போராட்டக்காரர்கள் குளிக்கும் காட்சிகளும், அங்கிருக்கும் கார்களை எடுத்து போராட்டக்காரர்கள் ஓட்டும் காட்சிகளும் தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது. அந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதிபர் கோத்தபயவின் அதிபர் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு கைப்பற்றியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசுக் கப்பலொன்றில், அவசர அவசரமாக கோத்தபய ராஜபட்சவின் உடமைகள் ஏற்றப்படும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது.

அதிபர் மாளிகைக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிய நிலையிலும், போராட்டக்காரர்கள் மாளிகைக்குள் நுழைந்தனர். இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக மிகப்பெரிய மக்கள் கிளர்ச்சி எழுந்துள்ளது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை வாயிலில் குவிந்துள்ளனர். போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 33 பேர் காயமடைந்தனர்.

First published:

Tags: Gotabaya Rajapaksa, Srilanka