போலந்தின் கருக்கலைப்புத் தடைச்சட்டத்திற்கு எதிர்ப்பு - ஐரோப்பிய நாடுகளில் பரவும் போராட்டம்

போலந்தின் கருக்கலைப்புத் தடைச்சட்டத்திற்கு எதிர்ப்பு

கருவில் ஏற்படும் குறைபாடுகளை காரணம் காட்டி கருக்கலைப்பு செய்வது சட்டவிரோதமானது என போலந்தின் அரசியலமைப்பு தீர்ப்பாயம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

 • Share this:
  போலந்தின் கருக்கலைப்புத் தடைச்சட்டத்திற்கு போராட்டம் வெடுத்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளில் அது பரவி வருகிறது.

  போலந்தின் கருக்கலைப்புத் தடைச் சட்டத்திற்கு எதிராக போர்ச்சுகலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கருவில் ஏற்படும் குறைபாடுகளை காரணம் காட்டி கருக்கலைப்பு செய்வது சட்டவிரோதமானது என போலந்தின் அரசியலமைப்பு தீர்ப்பாயம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

  இதனை எதிர்த்து போலந்தில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த போராட்டங்களுக்கு ஆதரவாக போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் வசிக்கும் போலந்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போர்த்துகீசிய மக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், ஐரோப்பா முழுவதும் பல்வேறு நாடுகளில் போலந்தின் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன.
  Published by:Rizwan
  First published: