Home /News /international /

இலங்கையில் 2வது நாளாக தொடரும் போராட்டம்.. குடும்பம் குடும்பமாக வந்து அதிபர் மாளிகையில் பொழுதை கழிக்கும் பொதுமக்கள்

நாடே நலிந்திருக்க, அதிபரின் மாளிகையில் கட்டுக்கட்டாக பணத்தைக் கண்டவர்கள், எண்ணி எடுத்து பொறுப்பாக ராணுவத்திடம் ஒப்படைத்தனர்.

    இலங்கையில் அதிபர் மாளிகையில் நுழைந்த பொதுமக்கள், அதனை மக்கள் மாளிகையாக மாற்றியுள்ளனர்.

    பல அடுக்கு பாதுகாப்பு, அதிபருக்கான தனி பாதுகாப்பு படை என இலங்கையின் அதிகாரம் மிக்க அதிபர் மாளிகை தற்போது அருங்காட்சியகத்தைப் போல மாறி இருக்கிறது. இலங்கை அதிபர் மாளிகை அமைந்துள்ள பகுதி கிலோமீட்டர் ஸீரோ எனப்படுகிறது. ஆனால் அதிபர் மாளிகைக்குள் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிகாரங்களை ஸீரோவாக்கி அலரி மாளிகையை தங்கள் வசம் கொண்டு வந்தனர்.

    வாழ்க்கை ஒரு வட்டம்; இதில் மேலே இருப்பவர் கீழே வரலாம்; கீழே இருப்பவர் மேலே செல்லலாம் என்ற திரைப்பட வசனத்தைபோல இலங்கையில் ஒரே இரவில் காட்சிகள் மாறின. எட்டாத உயரத்தையும் மக்கள் சக்தி எட்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒன்று சேர்ந்து கட்டிய ஏணியைக் கொண்டு அதிபர் மாளிகையின் மேல் தளத்திற்கே ஏறினர்.

    அறை அறையாகச் சுற்றி வந்த மக்கள் அதிபரின் நீச்சல் குளத்தில் ஆனந்தக் கூத்தாடினர்.

    அதிபர் நாட்டை விட்டு ஓடியதாகக் கூறப்படும் நிலையில், அவர் ஓடிய ட்ரெட் மில்லில் இப்படித்தான் நாட்டை விட்டு ஓடி இருப்பாரோ என்று எண்ணும்படியாக ஓடிக் கொண்டிருந்தனர் சில இளைஞர்கள்.

    அதிபரின் மெத்தையில் படுத்து ஆனந்தமாக புரண்டனர் சிலர். தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையேல் அதிபர் மாளிகையில் சமைத்து உண்போம் என அதிரடியாக களமிறங்கி அங்கேயே சமைத்து உண்டது ஒரு குழு.

    நாடே நலிந்திருக்க, அதிபரின் மாளிகையில் கட்டுக்கட்டாக பணத்தைக் கண்டவர்கள், எண்ணி எடுத்து பொறுப்பாக ராணுவத்திடம் ஒப்படைத்தனர்.

    விடுமுறை நாளில் குழந்தை, குட்டிகளுடன் கட்டுச் சோறு கட்டிக் கொண்டு திரண்டது மக்கள் கூட்டம். தங்களுக்கு உணவளிக்க தவறிய அதிபர் வளர்த்த மீன்களுக்கு உணவளித்து இன்னா செய்தாரை நன்னயம் செய்து ஒறுத்தனர் ஒரு குடும்பத்தினர்.

    அதிபர் மாளிகையை வலம் வந்து களைத்துப் போனவர்கள் ஆங்காங்கே சோஃபாக்களில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.

    மறுபுறம் அதிபர் மாளிகையின் புல்வெளியில் அமர்ந்து 'ராயல் லஞ்சை' சுவைத்த சிலர் தங்களது அலரி மாளிகை அனுபவங்களை புகைப்படங்களாக பதிவு செய்து கொண்டனர்.

    எல்லோரும் இலங்கையின் மன்னர்கள் என உணர்த்திய இந்த தருணங்கள் தற்போது இணையத்திலும், இலங்கை மக்களின் இதயத்திலும் உலாவந்து கொண்டிருக்கின்றன.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Srilanka

    அடுத்த செய்தி