கடந்த வாரம் சான் பிரான்சிஸ்கோ மேற்பார்வையாளர் வாரியம் உயிர்கள் ஆபத்தில் இருக்கும் போது வேறு மாற்று வழி எதுவும் கிடைக்காத தீவிர சூழ்நிலைகளில் வெடிமருந்துகள் கொண்ட ரோபோக்களை பயன்படுத்த காவல்துறைக்கு அனுமதி அளித்தது.
குற்றவியல் நீதி தொடர்பான பல ஆண்டுகளாக கணக்கீடுகளுக்கு மத்தியில், அமெரிக்கா முழுவதும் உள்ள காவல் துறைகள் இராணுவமயமாக்கப்பட்ட கருவிகள் மற்றும் படைகளைப் பயன்படுத்துவதற்கான ஆய்வுகளை அதிகரித்து வருவதால், இந்த அங்கீகாரம் வந்துள்ளது.
இதுவரை, சான் பிரான்சிஸ்கோ மற்றும் ஓக்லாண்ட் எனும் இரண்டு கலிபோர்னியா நகரங்களில் உள்ள போலீசார் ரோபோட்களைப் பயன்படுத்துவது பற்றிய விவாதங்களை அடுத்து இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. குற்றங்கள் தொடர்பாக சந்தேக நபர்களை கண்டறியவும், அவர்களை பின்தொடரவும், ஆபத்தான இடங்களுக்குள் நுழையவும், ரோபோக்களை போலீசார் பயன்படுத்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 22% பணியாளர்கள் தங்கள் பணியிடங்களில் வன்முறையை சந்திக்கின்றனர்- ஐநா அறிக்கை!
ஆனால் உயிரற்ற, சிந்தனை திறனற்ற ரோபோக்களிடம் ஆயுதங்களை கொடுத்தால் அது அப்பாவி மனிதர்களை பாதிக்கும். இது மனித இனத்திற்கு எதிராக எளிதாக செயல்படும். எனவே அதை உடனே திரும்ப பெற வேண்டும் என்று அமெரிக்க மக்கள் போராடி வருகின்றனர்.
இதற்கு முன்னர்…
2013 ஆம் ஆண்டில், பொஸ்டன் மராத்தான் குண்டுவெடிப்பு சந்தேக நபரை வேட்டையாடுவதன் ஒரு பகுதியாக, போலீசார் ஒரு ரோபோவைப் பயன்படுத்தி ஒரு தார்ப்பெட்டியைத் தூக்கி, அதன் அடியில் மறைந்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, டல்லாஸ் காவல்துறை அதிகாரிகள் வெடிபொருட்கள் நிரம்பிய ஒரு வெடிகுண்டு செயலிழக்கும் ரோபோவை எல் சென்ட்ரோ கல்லூரியின் குழிக்குள் அனுப்பி, துப்பாக்கி சுடும் Micah Xavier Johnson உடனான ஒரு மணி நேர மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
இப்படி சில நன்மைகளை செய்திருந்தாலும் ஆயுதம் ஏந்திய இயந்திரத்திற்கு குற்றவாளிகள், அப்பாவிகள் என்ற வித்தியாசம் தெரியாது. அறிவியல் எவ்வளவு வளர்ச்சி பெற்றாலும் அதில் குறைகள், தவறுகள் இருக்கத்தான் செய்கிறது. அதை பயன்படுத்தி மனிதர்கள் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விட கூடாது என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
சான் பிரான்சிஸ்கோ அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட கொள்கையானது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உயர்மட்ட அதிகாரிகளுக்கு மட்டுமே ரோபோக்களை பயன்படுத்த அனுமதிக்கும். மேலும் மாற்று சக்தி அல்லது விரிவாக்க தந்திரங்கள் இல்லாத போது, மனிதர்கள் சென்றால் ஆபத்து என்று தோன்றும் இடங்களில் மட்டும்தான் இது பயன்படுத்தும் என்று விளக்கமளித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Police, San Francisco