• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • இஸ்ரேல் பிரதமர் பதவி விலகக்கோரி 6 மாதங்களாக தொடரும் போராட்டம்

இஸ்ரேல் பிரதமர் பதவி விலகக்கோரி 6 மாதங்களாக தொடரும் போராட்டம்

இஸ்ரேல் பிரதமர் பதவி விலகக் கோரி போராட்டம்

இஸ்ரேல் பிரதமர் பதவி விலகக் கோரி போராட்டம்

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Share this:
    இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிரான போராட்டம் கடந்த 6 மாத காலமாக நடந்துகொண்டிருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் கொரோனா தொற்றை சரிவர கையாளாதது குறித்த புகார்களால் அவர் பதவி விலக வேண்டும் என்று போராட்டங்கள் தொடர்கின்றன.

    கொரோனா பரவல் காரணமாக அந்நாட்டில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக சமீபத்தில் அங்கு அதற்குரிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டன. வழக்கமாக நெதன்யாகுவின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு வெளியே போராட்டங்கள் நடைபெறும் என்றாலும், அந்த சமயத்தில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்குள் மட்டுமே வெளியில் நடமாட வேண்டும் என்ற கட்டுப்பாடு அங்கு இருந்தது. இதன் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கூடிய மக்கள் பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    Also read: ’என் மீது வழக்கு தொடர்ந்துள்ள முதலமைச்சருக்கும் காவல்துறைக்கும் நன்றி’ - ஆ.ராசா அறிக்கை

    தற்போது கொரோனாவுக்கான கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஜெருசலேமில் உள்ள நெதன்யாகுவின் அதிகாரபூர்வ இல்லத்தின் முன்பாக கூடிய போராட்டக்காரர்கள், நீதியின் முன் அனைவரும் சமம் என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர். ஜெர்மனியிடம் இருந்து சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நீர்மூழ்கி கப்பல் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், நீர்மூழ்கி போன்ற பலூனை வைத்து போராட்டம் நடைபெற்றது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: