விலைமதிப்பில்லாத கொம்புகளுக்காக தென்னாப்பிரிக்காவில் வேட்டையாடப்படும் காண்டாமிருகங்கள்

காண்டாமிருகங்கள்

ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே, வேட்டைக்காரர்கள் நடமாட்டம் அதிகமாகி உள்ளது.

  • Share this:
உலகின் மொத்த காண்டாமிருங்கங்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் தென்னாப்பிரிக்காவில் உள்ளன. ஆனால், அவற்றின் கொம்புகள், தெற்காசியாவில் பாரம்பரிய மருந்துகள் தயாரிப்பில் பெரிய பங்கை வகுத்துள்ளன.

கடந்த ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 249 காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டிருக்கலாம் என்று கடந்த சனிக்கிழமை அன்று, தென்னாப்பிரிக்க சுற்றுசூழல் அமைச்சர் தெரிவித்தார்.

கொரானா தொற்று பரவலை தடுப்பதற்காக மற்றும் குறைப்பதற்காக, தென்னாப்பிரிக்கா முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பாதுகாப்பு வழிமுறைகளுடன், ஊரடங்கு தளர்த்த அறிவுறுத்தப்பட்டன.ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே, வேட்டைக்காரர்கள் நடமாட்டம் அதிகமாகி உள்ளது. ஊரடங்கு காலத்தில், மனிதர்கள் நடமாட்டம் மற்றும் தொந்தரவுகள் இல்லாமல் மிருகங்களுக்கு பாதுகாப்பாக இருந்திருக்கிறது. ஆனால், தளர்வுகள் காண்டமிருகங்களுக்கு தாய்நாடாக இருக்கும் தென்னாப்பிரிக்காவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மொத்த காண்டாமிருங்கங்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் தென்னாப்பிரிக்காவில் உள்ளன. ஆனால், தெற்காசியாவில், அவற்றின் கொம்புகள் விலைமதிப்பில்லா பாரம்பரிய மருத்துவப்பயன் கொண்டுள்ளன.வேட்டையாடுபவர்கள் தொடர்ந்து காண்டாமிருகங்களை வேட்டையாடி வருகின்றனர். கடந்த ஆண்டு கொம்புகளுக்காக கொல்லப்பட்ட காண்டாமிருகங்களை விட, இந்த ஆண்டு 83 மிருகங்கள் அதிகமாக வேட்டையாடப் பட்டிருக்கின்றன.

குருகர் தேசியாவில் பூங்காவில், இந்த காண்டா மிருகங்கள் கூட்டமாக படுகொலை செய்யப்பட்டன. இதுகுறித்து அந்நாட்டு சுற்றுசூழல், வனவிலங்கு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர், பார்பரா கிரீசி கூறியதாவது, " ஜனவரி முதல், ஜூன் 2021 வரை, 249 காண்டா மிருங்கங்கள் அவற்றின் கொம்புகளுக்காக வேட்டையாடப்பட்டுள்ளன“ என்று தெரிவித்துள்ளார்.“கடுமையான விதிமுறைகளுடன் போடப்பட்ட ஊரடங்களைத் தளர்த்தியது, வேட்டையாடுபவர்களுக்கு சாதகமாகி விட்டது. இதனால், காண்டா மிருகங்களின் வேட்டை கடந்த ஆறு மாதங்களாக அதிகரித்துள்ளது” என்றும் தன் அறிக்கையில் தெரிவித்தார் அமைச்சர். லிம்போபோ, புமலங்கா, மற்றும் மற்ற சுதந்திரமான மாகாணங்களில் காண்டாமிருங்களுக்காக தனியார் சரணாலயம் இருக்கும் இடங்களில் வேட்டைக்காரர்களின் எண்ணிக்கையும், நடமாட்டம் அதிகரித்துள்ளது.

காண்டாமிருகங்களின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றில், தனியார் காண்டாமிருக சரணாலயம் மிகப்பெரிய பங்கை வகித்துள்ளன. அமைச்சகம், தனியார் சரணாலயங்களில் அதிகரித்துள்ள வேட்டைக்காரர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.காண்டாமிருகங்கள் கொல்லப்படுவதற்கான முக்கிய காரணம், அதன் கொம்புகள். தெற்காசியாவில், பாரம்பரிய மருத்துவத்தில், அதன் கொம்புகளுக்கு விலைமதிப்பில்லா மருத்துவத்தன்மை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மருத்துவத் தேவைகளுக்காக மிருகங்கள் கொல்லப்படுகின்றன.

கடந்த பத்து ஆண்டுகளில், இந்தக் காரணத்துக்காக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டுள்ளது என்பது அதிர்ச்சியூட்டும் தகவல். இது மிகவும் இலாபகரமான வணிகமாகக் கருதப்படுவதால், மிருகங்களின் வேட்டை நிற்கவில்லை.காண்டாமிருகங்களின் கொம்புகள், பொடியாக விற்பனை செய்யப்படுகிறது. காண்டா மிருகத்தின் கொம்பில், மனிதர்களின் நகங்களில் இருப்பது போல கெராட்டின் காணப்படுகிறது.
Published by:Sankaravadivoo G
First published: