சீக்கிய மகளிர் குழு உதவியுடன் சப்பாத்தி தயாரித்து மகிழ்ந்த இளவரசர் வில்லியம் மற்றும் மனைவி கேட்!- வைரல் வீடியோ

சீக்கிய அறக்கட்டளையுடன் இணைந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் சப்பாத்தி தயார் செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி உள்ளன.

சீக்கிய அறக்கட்டளையுடன் இணைந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் சப்பாத்தி தயார் செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி உள்ளன.

  • Share this:
பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத் மிடில்டன் இருவரும் ஸ்காட்லாந்து சீக்கிய அறக்கட்டளை ஒன்றின் ஊழியர்கள் சமையல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களுக்கு அரச குடும்பத்தை சேர்ந்த இருவரும் உதவி செய்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஈடன்பர்க் ராணியின் ராயல் இல்லமான ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனையில் உள்ள ஒரு ஹோட்டல் சமையலறையில் சிங் சஞ்சோக் (Singh Sanjog) அறக்கட்டளை குழுவுக்கு இளவரசர் வில்லியம் மற்றும் அவரது கேட் மிடில்டன் உதவியுள்ளார்கள். சமையலறையில் இவர்கள் செய்த பங்களிப்பின் மூலம், ஆங்கில ராயல் தம்பதிகள் ஈடன்பர்க்கில் பின்தங்கிய சமூகங்களுக்கு சூடான கறி உணவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தொண்டு நிறுவனத்திற்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர். டியூக் மற்றும் டச்சஸ் ஆஃப் கேம்பிரிட்ஜின் (Duke and Duchess of Cambridge) அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சீக்கிய அறக்கட்டளை குழுவின் உறுப்பினர்களுக்கு அரச குடும்ப தம்பதி உதவும் பல புகைப்படங்களை வெளியிடப்பட்டுள்ளது.

பிரிட்டனின் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகியோர் இங்கிலாந்தின் ஈடன்பர்க் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயாரித்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சீக்கிய அறக்கட்டளையான சஞ்சோக் குழுவுடன் இணைந்து தங்கள் கைகளாலேயே சப்பாத்திகள் மற்றும் கறியை செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். சப்பாத்திகள் மற்றும் கறி தயாரிக்கும் முயற்சியின்போது இருவரும் உற்சாகமாக காணப்பட்டனர். அப்போது இளவரசர் வில்லியம், தன் மனைவி கேட் மிடில்டன் தன்னை விட காரமான உணவை விரும்புவதாக நகைச்சுவையாக கூறினார். இது தொடர்பாக ட்விட்டரில் புகைப்படங்களை பதிவிட்டுள்ள Duke and Duchess of Cambridge, சீக்கிய சஞ்சோக்குடன் ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனையில் உள்ள கஃபே சமையலறையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விநியோகிக்க டியூக் (வில்லியம்) மற்றும் டச்சஸ்(கேட் மிடில்டன்) இருவரும் உணவு தயாரித்தனர் என்று குறிப்பிட்டுள்ளது.


அதேபோல, இது தொடர்பாக யூடியூப்பில் வெளியான ஒரு வீடியோவில், எவ்வாறு சப்பாத்திகளை சரியாக ரோல் செய்வது என்பதை தம்பதியினர் கற்றுக்கொள்வதை காணலாம். மேலும், உருண்டையான சப்பாத்தி மாவை சப்பாத்தி கட்டையை பயன்படுத்தி தட்டையாக்க தனது கணவர் வில்லியம்   முயற்சிக்கையில் கேட் மிடில்டன் பலமாக சிரிப்பதை பார்க்க முடிகிறது. நல்ல ஃபிரெஷ்ஷான கொத்தமல்லி இலைகளால் சூடான கறியை கார்னிஷ் செய்யும் கேட், கறியை தான் எப்படி நேசிக்கிறார் என்பதையும், அவ்வப்போது வீட்டில் கறியை சாப்பிட விரும்புவதாகவும் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார். இளவரசர் வில்லியம் தனது மனைவி நல்ல காரமான உணவை மிகவும் விரும்புகிறார் என்பதை ஆமோத்தித்தார்.
இதனிடையே ராயல் தம்பதியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர்களின் இந்த வருகை மற்றும் சில படங்கள் ஷேர் செய்யப்பட்டுள்ளன. இந்த பதிவின் தலைப்பில் சீக்கிய சஞ்சோக் அமைப்பின் எழுச்சியூட்டும் பணி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ராயல் ஃபேமிலி சேனலும் சமையலறையில் எவ்வாறு சப்பாத்திகளை தயாரிப்பது என்பதை தம்பதியர் கற்றுக்கொள்வதையும், செயல்முறையை ரசித்து பார்ப்பதையும் காட்டியுள்ளது. அரச குடும்பத்தினரின் வருகைக்கு சீக்கிய சஞ்சோக் அறக்கட்டளை நன்றி தெரிவித்துள்ளது.
Published by:Archana R
First published: