• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • பிரிட்டன் இளவரசர்களை ஒன்று சேர்த்த 'அம்மா பாசம்'!

பிரிட்டன் இளவரசர்களை ஒன்று சேர்த்த 'அம்மா பாசம்'!

டயானா சிலை திறப்பு

டயானா சிலை திறப்பு

  மேகன் மெர்கலை  இளவரசர் ஹாரி திருமணம் செய்துகொண்டதை தொடர்ந்து அவருக்கு அரச குடும்பத்துக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டது. ஒருகட்டத்தில், தனது இளவரசர் அந்தஸ்தத்தை துறப்பதாக அறிவித்த ஹாரி, மேகன் மேர்கலுடன் பிரிட்டனை விட்டு வெளியேறி  அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வசித்து வருகிறார். 

  • Share this:
    வேல்ஸ் இளவரசி டயானாவின் 60வது பிறந்தநாளையொட்டி லண்டனில் உள்ள அரண்மனை தோட்டத்தில் அவரது சிலை திறக்கப்பட்டது.

    பிரிட்டன் இளவரசர் சார்லஸின் முதல் மனைவி இளவரசி டயானா. இவர்களுக்கு வில்லியம், ஹாரி என இரு மகன்கள் உள்ளனர். பிரிட்டன் அரச குடும்பத்தின் மருமகளாக இருந்தபோதிலும் அனைவரிடத்திலும் இயல்பாக பழகிய டயானாவின் பண்பு  அவரை உலகம் முழுவதும் பிரபலமடைய செய்தது.  அதேவேளையில், துணிச்சலான பேட்டிகள் மூலம் சர்ச்சைக்குரிய நபராகவும் அவர் அறியப்பட்டார்.

    கடந்த  1995ம் ஆண்டு பிபிசிக்கு அளித்த பேட்டியில், தனது திருமணத்தை தாண்டிய தொடர்பு, இளவரசர் சார்லஸ் மற்றும் கமிலா இடையே இருந்த உறவு என அரண்மனை ரகசியங்கள் பலவற்றை  டயானா வெளிப்படையாக கூறினார். இந்த பேட்டி ஒளிபரப்பாக உலகம் முழுவது பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த பேட்டிக்கு பிறகு ஊடகங்கள் என்றாலேயே விலகி இருக்க தொடங்கினார் டயானா. இதற்கிடையே, கடந்த 1997 ஆம் ஆண்டு 31ம் தேதி பத்திரிகையாளர்களுக்கு அஞ்சி காரில் வேகமாக சென்றபோது டயானா விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    டயானா உயிரிழந்து 23 ஆண்டுகள் கடந்த நிலையில்,  அவரது 60வது பிறந்த நாளை முன்னிட்டு  இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள அரண்மனை தோட்டத்தில் டயானாவுக்கு சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது.

    அமெரிக்க நடிகை  மேகன் மெர்கலை  இளவரசர் ஹாரி திருமணம் செய்துகொண்டதை தொடர்ந்து அவருக்கு அரச குடும்பத்துக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டது. ஒருகட்டத்தில், தனது இளவரசர் அந்தஸ்தத்தை துறப்பதாக அறிவித்த ஹாரி, மேகன் மேர்கலுடன் பிரிட்டனை விட்டு வெளியேறி  அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வசித்து வருகிறார்.

    இதையும் படிங்க: 12 வயதிலேயே செஸ் விளையாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம்: சாதனை படைத்த சிறுவன்..


    இந்நிலையில்,  தாய் டயானாவின் சிலை திறப்பிற்காக மனகசப்புகளை விட்டு சகோதரர்கள் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டனர்.  டயானாவின் சிலையை திறந்துவைத்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், டயானாவின் 60வது பிறந்த நாளில் அவரது அன்பு, பலம் மற்றும் குணத்தை நினைவுக் கூர்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

    ஒவ்வொரு நாளும்,   தாய் டயானா இன்னும் எங்களுடன் இருந்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், இந்த சிலை அவரது வாழ்க்கை மற்றும் அவரது மரபின் அடையாளமாக என்றென்றும் காணப்படும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: