Home /News /international /

ராணியை பார்க்க மனைவியின்றி தனியாக வந்த இளவரசர் ஹாரி

ராணியை பார்க்க மனைவியின்றி தனியாக வந்த இளவரசர் ஹாரி

இளவரசர் ஹாரி

இளவரசர் ஹாரி

இளவரசர் ஹாரி ராணி எலிசபெத்தை பார்க்க மனைவி மேகன் மார்க்ல் இல்லாமல் தனியாக சென்றுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai |
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் புல்லட்டின் வெளியிட்டதைத் தொடர்ந்து, இளவரசர் ஹாரி, மனைவி மேகன் மார்க்லே இல்லாமல் ஸ்காட்லாந்திற்குச் சென்றார் என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளவரசர் வில்லியம் உட்பட அரச குடும்ப உறுப்பினர்கள் ஸ்காட்லாந்தில் உள்ள ராணி எலிசபெத் II இன் பால்மோரல் இல்லத்திற்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து வந்தடைந்ததாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இளவரசர் வில்லியம், ராணியின் பேரன், மன்னரின் இரண்டாவது மகன் இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் அவரது இளைய மகன் இளவரசர் எட்வர்ட் ஆகியோர் இணைந்து ஒரு காரில் கோட்டைக்கு வந்தனர்.

ராணியின் வாரிசு இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது சகோதரி இளவரசி அன்னே ஆகியோர் ஏற்கனவே மகாராணியின் வீட்டில் இருந்தனர்.

எலிசபெத் மகாராணியின் 500 மில்லியன் டாலர் சொத்து யாருக்கு?

இளவரசர் ஹாரி ராணி எலிசபெத்தை பார்க்க மனைவி மேகன் மார்க்ல் இல்லாமல் தனியாக சென்றுள்ளார். இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் மிடில்டனுடன் விண்ட்சரில் இருகின்றனர். அதில் மஹாராணியைக் காண இளவரசர் வில்லியம் மட்டும் மனைவி இன்றி தனியாக வந்துள்ளார். இது தற்போது ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது. ஏனெனில் தம்பதியரின் மூன்று குழந்தைகள் வியாழன் அன்று பள்ளிக்கு முதல் நாள் சென்றதால் அவரது மனைவி வரவில்லை என்று செய்தி வட்டாரங்கள் காரணம் தெரிவிக்கின்றன.

அதேபோல் இளவரசர் வில்லியம் மிகவும் தாமதமாக வந்துவிட்டார், குடும்பம் பால்மோரலை அடைவதற்குள் ராணி உயிர் பிரிந்துவிட்டது என்று தெரிவித்தனர்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: England, Queen Elizabeth

அடுத்த செய்தி